Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

Pradhipa Senthil's-En Karuppazhagi-Story Thread

Discussion in 'Pratheeba Senthil's Novels' started by Srikala, Aug 13, 2017.

Thread Status:
Not open for further replies.
 1. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  “ஆண்டோ கம் டு மை கேபின்” என அலைபேசியின் வாயிலாக அழைப்பு விடுத்தான் ஷிவேந்திரன். “எஸ் பாஸ்” எனப் பதிலளித்துவிட்டு அடுத்த 30 வினாடிகளில் ஷிவ்வின் அறைக்குள் இருந்தான் ஆண்டோ.

  “வசந்த எங்க?” என வினவினான் ஷிவ். “அப்ஸ்காண்டட்” என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் ஆண்டோ. “ஹண்ட் ஹிம் டவுன் பிஃபொர் 12 பி.எம்” என அழுத்தமானக் குரலில் உத்தரவிட்டான். “டன் பாஸ்” என்றான் ஆண்டோ. அவன் வாயிலை நோக்கி நடந்தான், ஆண்டோ என்ற ஷிவ்வின் நின்று திரும்பினான். இன்னும் 2 ஹவர்ஸ்ல நான் போட் கிளப் ஹவுஸ்க்கு போகனும், மேக் தி நெசசரி அரேன்ஜ்மென்ட்ஸ்” என்றுவிட்டு தனது வேலையில் ஆழ்ந்தான். “எஸ் பாஸ்” என்றான் உள்ளே சென்றுவிட்டக் குரலில். அந்தக் குரலின் மாறுதலை ஷிவ் உணர்ந்தான். ஆனால் உணர்ந்ததாக காட்டிக் கொள்ளவில்லை.

  போட் கிளப் ஹவுஸ்! ஷிவ்வின் மன்மத ராஜ்ஜியம். அவனையும் அங்கு உள்ள வேலையாட்கள், மற்றும் அந்தப் பெண்களைத் தவிர அங்கு யாருக்கும் உள்ளே வர அனுமதி இல்லை. இன்று காலையில் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு இரவு வேறு பெண்ணுடன் உறவு கொள்ளப் போகிறான்! “அந்த மாமா பயலோட இப்போ பேசனுமா தலையெழுத்து” என மனம் வெதும்பி அந்த நபர்க்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்தான். ஷிவ்வின் உத்தரவை 20 வினாடிகளில் கூறிவிட்டு. அலைபேசியை அணைத்துவிட்டான். அவனுக்கு மனது பாரமாக இருந்தது, புகழினியை எண்ணி. “சர்ச்சிர்கு போகனும் ஆஃபிஸ் முடிஞ்சோன” என மனதிற்குள் தனது பாவத்தைக் கர்த்தரின் காலடியில் சமர்ப்பிக்க விழைந்தான் ஆண்டோ.

  ஷிவ் தனது அலுவலகத்தை விட்டுக் கிளம்பினான் ஒரு பஜீரோ வண்டியில் ரகசிய வாயிலின் வழியாக. அவனது ரோல்ஸ் ராய்ஸ் சென்னையில் வெகு பிரசித்தம். கிளப் ஹவுஸிர்கு செல்லும் பொழுது வேறு வண்டிகளைத் தான் அவன் உபயோகப் படுத்துவது. அவனே ஓட்டிச் செல்வான்.

  அவனது கார் கிளப் ஹவுஸிர்குள் குலுங்கி நின்றது. அந்தக் கட்டிடம் வித்தியாசமான கட்டமைப்புடன் கட்டப்பட்டது. வெளியில் இருந்து யார் பார்த்தாலும் அங்கு நடப்பவைத் தெரியாத மாதிரி கட்டப்பட்டுள்ளது. பங்களாவின் வாசலைத் தாண்டி ஒய்யாரமாக நடந்து வந்தாள் ஸ்லீவ்லெஸ் கவுன் போட்ட மார்டன் யுவதி ஒருத்தி. ரோஷினி! அவனைக் கட்டி தழுவி, கழுத்தை வளைத்து அவனின் உதட்டைக் கவ்வி உறிஞ்சினாள். ஷிவ் அவளை அவனிடம் இருந்து அவளைப் பிரித்து எடுத்தான்.

  “ரோஷினி, கீப்பிட் இன் யுர் மைண்ட். யு ஆர் நாட் மை வைஃப்! நீ யாரு, எதுக்கு வந்துருக்கேனு மறந்துடாதே! பெட் ரூம் தான் உன்னோட ஹைட் அவுட், அந்த ஸ்பேஸ் தாண்டி நீ வரக் கூடாது! காட் இட்.” என அழுத்தமானக் குரலில் கூறிவிட்டு மாடிப் படிகளில் ஏறிச் சென்றுவிட்டான் ஷிவ்.

  ரோஷினிக்கு முகம் கருத்துவிட்டது. ரோஷினி 21 வயது கேரள பேரழகி, பிரபலமான மாடல், 2 வெற்றிப் படங்களில் நடித்துவிட்டாள். நான்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாள், அதுவும் பெரிய ஹீரோக்களுடன். கோடிகளில் சம்பளம். இவள் தான் அடுத்த நயன்தாரா என கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருக்கிறது! அவளின் அழகைப் பார்த்து மயங்கி, அவளின் பாதங்களில் பணிந்து அவளுக்குச் சேவகம் செய்யவும், அவளுக்காக தங்களது சொத்தை எழுதி வைக்கவும் சில பலர் காத்துக் கிடக்கின்றனர். பெண் பித்தர்கள்!!!

  ஷிவேந்திரன் அவர்களில் ஒருவன் அல்லவே! அவனை அடையத் துடிக்கும் பெண்களில் ரோஷினியும் ஒருத்தி. எவ்வளவோ முறை அவன் அவளை உதாசினப் படுத்தி இருக்கிறான் தான். ஆனால் இன்று போல், நீ ஒரு வேசி ஒரு நாளும் நீ என் மனைவியாக முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் கூறியதில்லை. அவளுக்குக் கோபம் கரைபுரண்டு ஓடியது. ஆனால் அவள் அதனைக் காட்டினால் அவளை நாளைப் பிச்சைக்காரியாகத் தெருவில் நிறுத்தி விடுவான்! எமகாதகன்! என எண்ணமிட்டவாறே மாடிக்குச் சென்றாள்.

  ஷிவேந்திரன் இரவு உடையில் கையில் விஸ்கி நிரம்பிய கோப்பையுடன் பால்கனியின் வாயிலாகக் கடலை வெறித்துக் கொண்டிருந்தான். கதவு திறக்கும் அரவம் கேட்டும் அவன் திரும்பவில்லை. “டார்லிங்” எனக் கிள்ளை மொழியில் கொஞ்சிக் கொண்டு அவனைப் பின்பக்கமாக அணைத்தாள் ரோஷினி.

  தனது கையில் இருந்த விஸ்கியை ஒரே மூச்சில் குடித்துவிட்டு. அவளை முன் பக்கமாக இழுத்தான். அவள் மறுபடியும் அவனை அணைக்க முற்பட்டாள். அவன் அவள் தோள்களை அழுந்தப் பற்றி இருந்தான். அவளால் நகர முடியவில்லை.

  அவளின் கண்களை ஊன்றிப் பார்த்தான் ஷிவ். அவன் மனது சொல்லியது “சாகசம், பேராசை நிறைந்த கண்கள்” என்று. அவளைத் தன்னை விட்டு விலக்கி விட்டான். அந்தக் கண்கள்! எந்தப் பெண்களிடமும் பார்க்காத உணர்வுகளைப் பிரதிபலித்தன! அது என்ன? தீவிரமான யோசனைக்கு உள்ளானான்.

  ரோஷினி கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள். கிட்டே சென்றால் அடித்தாலும் அடித்து விடுவான் முரடன். அவள் அடிவாங்கியவள் தான்! பின்னே லட்சங்களில் காசை வாரி இரைக்கிறான். அடித்தால் தப்பொன்றும் இல்லையே??? என எண்ணினாள் அந்த அழகி!
   
 2. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  ஷிவ் திரும்பினான் மெதுவாக ரோஷினியை நெருங்கி அவளை இறுக அணைந்தான். அவளும் அவனது அணைப்புக்கு மயக்கத்துடன் கட்டுண்டு கிரகத்துடன் அவனை நோக்கினாள். பின்பு அவளின் இடையில் கை கொடுத்துத் தூக்கி சென்று கட்டிலில் வீசினான். அவள் பொத்தென்று அந்தப் பஞ்சு மெத்தையில் விழுந்து உருண்டாள். அவள் மீது கவிழ்ந்தான். வசந்தன், சாந்தகுமார் மேல் உள்ள ஆத்திரம் எல்லாவற்றிற்கும் அவள் வடிகால் ஆனாள்.

  நள்ளிரவு 12.20 மணிக்கு அவனுக்கு ஓர் குறுஞ்செய்தி வந்தது. அதனைப் படித்தவன் உடனே குளியல் அறைக்குள் சென்று குளித்துவிட்டு, ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு. ரோஷினிடம் திரும்பி “லுக் இன்னும் 15 மினிட்ஸ்ல நீ இங்கிருந்து போனும். ஒகெ” என ஆணையிட்டு விட்டு மாடிப்படிகளில் இறங்கிச் சென்றுவிட்டான்.

  ரோஷினி பல்லைக் கடித்தாள்! ஆனால் அவளால் வேறு என்ன செய்ய முடியும். லேசாகத் தள்ளாடியவாறு குளியல் அறை நோக்கிச் சென்றாள்.

  ஷிவ்வின் பஜீரோ கார் ஈ.சி.ஆர் சாலையில் ஆள் அரவமற்ற இடத்தில் நின்றது. வேகமாக இறங்கி தனது ரோல்ஸ் ராய்ஸில் ஏறிக் கொண்டு சுபிக்ஷத்தை நோக்கிப் பறந்தான்.

  “பயணிகளின் கனிவான கவனத்திற்கு! நாகர்கோயிலில் இருந்து திருச்சி வழியாக வரும் நாகர்கோயில் எக்ஸ்பரஸ் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்பாரம் நம்பர் ஒன்பதை வந்தடைய இருக்கிறது” என ஒரு அறிவிப்புக் குரல் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டு இருந்தது, சென்னை செண்டரல் ரயில் நிலையத்தில்.

  ரயில் நின்றது, பயணிகள் கிடு கிடுவென இறங்கினர். அது நள்ளிரவு 12.30 மணி, இருப்பினும் கூட்டம் அலை மோதியது. எல்லோரும் தங்கள் கூட்டுக்குள் அடைய வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். சிலர் தங்கள் பயணத்திற்கான ரயிலுக்காகக் காத்துக்கிடந்தனர்.

  “உன் குச்சியைக் குடு பாப்பா, அப்புறம் வாங்கிக்கலாம்” என்றார் அன்னம்மா. அவரும் அந்த இளைஞனும் புகழினி ரயிலில் இருந்து கீழே இறங்குவதற்கு உதவி செய்தனர். அன்னம்மா அவனுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார். அவன் தலையசைத்து ஏற்றுக் கொண்டான். அப்பொழுது அவர்களின் காரோட்டி வந்தான். அந்த இளைஞன் லேசாக புன்னகைத்து விட்டு அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.

  “ஏன் பாப்பா, தெம்பா இருக்கியா? இங்க ரொம்ப தூரம் நடக்கனும்! உன்னால முடியுமா கண்ணு, எதுவும் சாப்பிட வேணுமா?” எனப் பரிவுடன் வினவினார் அன்னம்மா. ஆழ மூச்சிழுத்துக் கொண்டாள். பின்னர் லேசாகப் புன்னகைத்துவிட்டு தன் ஊன்றுகோல்களை ஊன்றி நடந்தாள் புகழினி. பிறகு மெதுவாக அவர்களின் காரை நோக்கிச் சென்றனர்.

  அந்த நள்ளிரவு கார் பயணம் அவளுக்குப் புதுமையாக இருந்தது. நள்ளிரவிலும் பளிச்சென விளக்குகள் மின்ன ஜன சந்தையுடன் இருக்கும் அந்த ஊர் அவளுக்குப் புதிது! அவள் ஆர்வமாக வேடிக்கை பார்த்தபடி வந்தாள். அன்னம்மாவுக்கு அவளின் முக மலர்ச்சி சற்று ஆறுதலைத் தந்தது. அவரின் முதலாளி தர்மேந்திரன் அவர்களுடன் தான் ரயிலில் பயணம் செய்தார். ஆனால் அவரைக் காணவில்லையே??? இந்தக் கேள்வியை அவரால் வாய் திறந்து கேட்டுவிட முடியாது. எனவே அவரும் ஜன்னலின் வாயிலாக வேடிக்கைப் பார்க்கலானார்.

  கார் சுபிக்ஷத்தினுள் நுழைந்தது. அந்த மாளிகையைச் சுற்றி இருந்த தோட்டத்தை ஆர்வத்துடன் பார்த்தாள் புகழினி. மாளிகையை ஒப்புக்குப் பார்த்தாள். கலைநயமாக இருக்கிறது என எண்ணினாள்.

  அன்னம்மாள் அவள் இறங்குவதற்கு உதவி செய்தார். “என்ன பாப்பா பாக்குற இது தான் எங்க ஐயாவோட வீடு” என்றார் அன்னம்மாள். அவளிடம் அதற்கு எந்த பிரதிபலிப்பும் இல்லை. என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. அவள் வாழவிருக்கும் வீடு என்றோ உன்னுடைய வீடு என்றோ உன் புகுந்த வீடு என்றோ அவர் சொல்லவில்லையே! பின் அவள் என்னவென்று பதில் சொல்லுவாள்!

  அவர்கள் போர்டிகோவில் இருக்கும் படிகளை நோக்கி மெதுவாக நகர்ந்தனர். அப்பொழுது புயலின் வேகத்துடன் ஒரு கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் புகழினியை மோதுவது போல் வந்து நின்றது. அன்னம்மா சடுதியில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு புகழினியை நகர்த்த முயன்றார். அதற்குள் கார் கதவினைத் திறந்து இறங்கினான் ஷிவ், புகழினியை ஆழ்ந்து பார்த்தவாறே! அன்னம்மா பின்னுக்கு நகர்ந்துவிட்டார்.

  எங்கே கார் தன்னை மோதிவிடப் போகிறதோ என்ற பயத்தில் அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். ஷிவ் அவளைப் பார்த்தவாறே அவளின் முன் வந்து நின்று சொடக்கிட்டான் இரு முறை! பட்டெனக் கண் இமைகளை மலர்த்தினாள் புகழினி. அந்த சொடக்கொலி அவளுக்கு எதையோ உணர்த்தியது. போர்ட்டிகோவில் தொங்குகின்ற ஷேண்டிலியர் வெளிச்சத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக உள்வாங்கிக் கொண்டனர். அவள் மிரட்சியுடன் ஷிவேந்திரனை அண்ணாந்து நோக்கினாள். ஷிவேந்திரன் ஆராய்ச்சியுடன் அவளைக் குனிந்து நோக்கினான்.

  மூன்று முடிச்சிட்ட மணாளன்! அவளைப் புருவங்கள் முடிச்சிட ஆராய்வதேனோ???


  கருப்பு அழகி வருவாள்…

   
 3. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  ஹாய் நட்புகளே,
  தளத்தில் சிறு வயது வாசகர்களின் வருகையைக் கருத்தில் கொண்டு கடைசி இரண்டு போஸ்டில் சில மாறுதல்கள் செய்துள்ளேன். யாவரும் படிக்கக் கூடிய கதையை தரவே எப்போழுதும் பிரியப்படுகிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் இதனை சுட்டிக் காட்டிய வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் :)

  அப்புறம் அப்டேட், வர சனி அன்று தான். நல்லிரவுக்கு மேல் :) இது என்னோட முதல் கதையால என்னால் பிளான் பண்ணி அப்டேட் குடுக்க முடியில. ஆர்வக் கோளாறு! நான் பாட்ல இறங்கிட்டேன். சோ கொஞ்சம் பொருத்துகோங்க. அடுத்து வர கதைகள்ல பக்கவா பிளான் பண்ணி அப்டேட்ஸ் குடுக்குறேன். நேரமின்மை முக்கிய காரணம். டெய்லி அப்டேட் கொடுக்க நான் ட்ரை பண்றேன் பா. அடுத்த வாரம் வேனா ட்ரையல் பாக்கலாம்.

  எல்லாருக்கும் கதை பிடிச்சதில ரொம்ப சந்தோசம் :) உங்களோட கருத்துக்கு பதில் அனுப்பக்கூட எனக்கு முடியல. வெரி வெரி சாரி. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா பதில் அனுப்புறேன். மனசுல வச்சுக்காதிங்க பா :)

  உங்க எல்லாரோட ஆதரவுக்கும் ரொம்ப நன்றி. கண்டிப்பா உங்க உற்சாகத்தை ஒரு பிடி அளவு குறைக்காம வர அப்டேட்ஸ் எல்லாம் இருக்கும். தொடர்ந்து படிங்க, உங்க கருத்த கண்டிப்பா பகிர்ந்துகுங்க. தப்ப எனக்கு கண்டிப்பா சுட்டிக் காட்டுங்க. அத என்ன நல்லபடியா செப்பினட உதவும். இந்த எடத்தில நான் திஷி அக்காவுக்கு தான் நன்றி சொல்லனும். அவங்க என்ன நிறைய எடத்தில கரெக்ட் பண்ணி இருக்காங்க. தாங்கஸ் திஷி அக்கா :)
   
 4. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  ஹாய் நட்புகளே!
  நான் வந்துட்டேன் :) இன்று ஒன்பதாவது அப்டேட்டை பதிவிடுறேன். சந்தோசமா படிச்சிட்டு உங்க கருத்த மறக்காம பகிர்ந்துக்குங்க!

  அடுத்த அப்டேட் செவ்வாய் அன்று நள்ளிரவில் :)
   
  viji.s, Kayalvizhi, sumee and 11 others like this.
 5. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  அத்தியாயம் – 9
  ஷிவேந்திரன் புருவங்கள் முடிச்சிட அவனது மனையாளைக் கூர்மையாக தலை முதல் கால் வரை பார்வையிட்டான். அவள் கால்களில் அவன் பார்வை சற்று நேரம் நிலைத்து நின்று, அவள் உடுத்தியிருந்த கருஞ்சிவப்பு பட்டு புடவையைத் தாண்டி ஊடுருவ முயன்றது. தலை குனிந்த நிலையில் இருந்த அவளின் முன் மறுபடியும் சொடக்கிட்டான் ஷிவ். சட்டென அவள் தலை நிமிர்ந்து தன் கணவனை ஏறிட்டாள்! அவளின் அகண்டிருந்த சிறிய விழிகளை ஊடுருவியவன், பின்பு எதுவும் சொல்லாது பேர்டிகோவை ஒட்டியிருந்த நீளமான அகலமான படிகளில் தாவி ஏறி வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

  புகழினியை அன்னம்மா அணைத்துக் கொண்டு “வாம்மா போகலாம்” என்றார் மென்மையாக. புகழினிக்கு ஷிவேந்திரனைக் கண்ட பின்பு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. அவனது தோற்றமும், பார்வையும் அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

  அன்னம்மாவுக்கு மனம் சங்கடப்பட்டது! காலையில் திருமணம், மதியம் இரயில் பயணம், வரவேற்க ஆளின்றி புகுந்து வீட்டிற்குள் அடியடுத்து வைக்கும் நள்ளிரவு தருணம்! அவள் என்ன செய்வாள் பாவம்! கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிக் கூவலாம். ஆனால் கொண்டவர், பெற்றவர், உற்றவர், மற்றவர் என யாவரும் அவளைக் கழித்துக் கட்டிய பின், அவளுக்குப் பயம் பிடிக்காமல் இருந்தால் அல்லவா அது ஆச்சரியம்! பாவப்பட்ட பெண்! இன்னும் என்ன என்ன கொடுமைகள் நடக்கப் போகிறதோ!!! அந்த ஆண்டவன் தான் இந்த பொண்ண காப்பத்தனும் என மனதிற்குள் புழுங்கினார் அன்னம்மா.

  தனது மனக்கிலேசத்தை மறைத்துக் கொண்டு லேசாகப் புன்னகைத்தவாறு “கண்ணு, எதுக்கு கலங்குற?? கிறுக்கு புள்ள மொதல்ல கண்ண தொட” என அவளை சமாதானப் படுத்தியவாறே அவளது கண்ணீரை அவசரமாக அழுந்த துடைத்துவிட்டார். ஷிவேந்திரனுக்கு கண்ணீர் விடுவது பிடிக்காது! அதிலும் பெண்கள் கண்ணீர் விட்டால் கொதித்து விடுவான்! கண்ணீர் விடுபவர்களை நீலி கண்ணீர் வடிக்காதே, நாடகம் ஆடாதே என காய்ச்சி எடுத்து விடுவான். அதுவே அவர் அவசரமாக அவளின் கண்ணீரை துடைப்பதற்குக் காரணம்!

  அவளை மெதுவாக அணைத்தவாறு படிகளில் மெல்ல ஏறினார். சுபிக்ஷம் பழங்கால அரண்மனை போல் கட்டப்பட்ட காரணத்தினால் 21 படிகள் இருந்தன போர்டிகோவில் இருந்து வீட்டின் பிரதான வாயிலுக்கு. மெதுவாகத் தனது ஊன்றுகோல்களை ஊன்றி சற்று சிரமத்துடன் படிகளில் ஏறினாள். படிகள் அகலமாக இருந்தமையால் அவள் நொண்டிக் கொண்டு ஏறுவதற்கு ஏதுவாக இருந்தது. அன்னம்மா மனதினில் “இவங்க உச்சானி கொம்புல தான் ஏறி உக்காரனும்மா, கீழ உக்காந்தா காணாதா! பாவம் புள்ள எவ்வளவு சிரமப்படுது!” எனப் புகழினிக்காக தனது எசமானர்களை மனதினுள் வைதார் அந்த ஈர நெஞ்சமுள்ள பெண்மணி.

  அன்னம்மாவும் புகழினியும் ஒருவாறு மாடி ஹாலை அடைந்து விட்டனர். அங்கு நிசப்தமாக இருந்தது, பெரிதாக தொங்கி கொண்டிருந்த சாண்டிலியர் தனது வெளிச்சத்தை பரப்பியிருந்தது. அன்னம்மாவுக்கு அவளை எங்கே தங்க வைப்பது என யோசனையாக இருந்தது. புகழினியை அந்த வீட்டின் அலங்காரமான ஆடம்பர தோற்றம் அவளை மிரட்டியது. அவளுடைய பிறந்த வீடு செல்வ செழிப்பான குடும்பம் தான். ஆனால் தன் புகுந்த வீட்டினரின் செல்வ நிலைக்கு தன் பிறந்த வீடு ஈடு இணையாகாது என்பதைப் புரிந்து கொண்டாள்.


  சொடக்கொலி கேட்டது, பேந்த பேந்த விழித்து கொண்டிருந்த புகழினியும் யோசனையுடன் நின்றிருந்த அன்னம்மாவும் சப்தம் வந்த திசையை நோக்கித் திரும்பினர். ஷிவேந்திரன் அந்த நவீன ஹாலில் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய ஆடம்பர இருக்கையில் நடுநாயகமாகக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்!

  சிகரட்டின் புகையை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டவாறு அவளைப் பார்வையிட்டான். திருமணக் கோலத்தில் புடவை கசங்கி, தலையில் இருந்த பூக்கள் வாடி, சிறிய கண்கள் சிவந்து, அழுது வடிந்த முகத்துடன் வாடி வதங்கிய கொடி போல் காட்சியளித்தாள் புகழினி. தனது இருக்கையில் இருந்து எழுந்து அவளின் அருகே வந்தான். அன்னம்மா பின்னே நகர்ந்து கொண்டார்.

  சட்டென்று அவளின் இடது கையில் பற்றி இருந்த ஊன்றுகோலை தன் வலது காலால் தட்டிவிட்டான். கணவனின் இந்த திடீர் தாக்குதலினால் புகழினி நிலை தடுமாறி தரையில் விழுந்தாள். ஷிவேந்திரன் தன்னுடைய ஷூ அணிந்திருந்த வலது காலால் அவளுடைய புடவையை இடது காலின் முட்டி வரை மேல் ஏற்றிவிட்டு அவளின் சூம்பியிருந்த கால்களைப் பார்த்தான்.

  அன்னம்மா “ஐய்யொ கண்ணு” என அலறியவாறு புகழினியை நோக்கி மனம் பதற அடியடுத்து வைத்தார். ஷிவேந்திரனின் அழுத்தமான பார்வையில் மனம் கலங்க நின்றுவிட்டார். ஷிவேந்திரனின் முன்னிலையில் அழுதுவிட முடியாதே!
   
 6. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  தரையில் அலங்கோலமாய் சரிந்து கிடந்த புகழினிக்கு வலியில் உயிர் போயிற்று. லேசாக முனகினாள், அவளுக்குக் கண்களில் நீர் உடைப்பெடுத்தது. வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது, முடியவில்லை!

  புகழினி தன்னைச் சமாளித்து கொண்டு எழுந்து அமர்ந்து கொண்டாள். அன்னம்மாவை கலங்கிய விழிகளுடன் நோக்கினாள். ஷிவேந்திரனை பார்க்க அவளுக்குப் பயமாக இருந்தது. அவள் கொடுமைகளை அனுபவித்தவள் தான். ஆனால் இப்படி ஒரு செயலை கணவனாகப் பட்டவனிடம் இருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. தாலி என்ற மஞ்சள் கயிற்றை பெயருக்குக் கட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றவன் தானே அவளுடைய கணவன்!!!

  “உன்னால் இந்த வாக்கிங் ஸ்டிக்ள் இல்லாமல் நடக்கமுடியாதா?” என அழுத்தமான குரலில் வினவினான். புகழினி கலங்கிய விழிகளுடன் உதடுகள் துடிக்க குனிந்த தலையுடன் இல்லை எனத் தலையாட்டினாள். மறுநிமிடம் அவளது ஊன்றுகோல்கள் திக்கொன்றுக்கு பறந்து போய் விழுந்தன. ஷிவேந்திரன் அவளின் பக்கத்தில் கிடந்த ஊன்றுகோல்களை தன் காலால் பலமாக எத்திவிட்டிருந்தான்.

  புகழினி மீனைப் போல் அவளது வாயைத் திறந்து அண்ணாந்து ஷிவேந்திரனை இமைக்க மறந்து அதிர்ச்சியுடன் நோக்கினாள். என்ன மாதிரி செயல் இது??? “எந்திரிடி” என உறுமினான் ஷிவேந்திரன்.

  ஷிவேந்திரனின் உறுமலில் அன்னாம்மா நான்கடி பின்னால் நகர்ந்து கொண்டார். அவருக்கு புகழினியை நினைத்தால் பாவமாக இருந்தது. “இந்த பொண்ண என்ன பண்ண போறாரோ???” என ஷிவேந்திரனை நினைத்து மனதிற்குள் கிலி பிடித்துக் கொண்டது அவருக்கு.

  புகழினி நடுங்கும் தனது இருக் கைகளையும் தரையில் ஊன்றி எழுந்த கொள்ள முயன்று தடுமாறி குப்புற விழுந்தாள். வலியை உதட்டைக் கடித்து கொண்டு உள்ளடக்கினாள். காலையில் இருந்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவள் தலையில் இடியாக இறங்கிக் கொண்டிருந்தன. அதன் விளைவு, அவளின் உடலும் மனமும் சோர்ந்துவிட்டன! பாவப்பட்ட சீவன்!!!

  ஷிவேந்திரன் தனது பேண்ட் பாக்கட்டிற்குள் தனது இடது கையை நுழைத்துக் கொண்டு வலது கையால் சிகரட்டை புகைத்தவாறே அவளைக் கீழ் கண்ணால் நோக்கினான். அவனது உதடுகள் வலது பக்கமாக லேசாகக் கீழ் நோக்கி வளைந்தன.

  அன்னம்மாவுக்கு ஷிவேந்திரனை வெறுப்பாக சில வினாடிகள் பார்த்தார். “ச்சே என்ன மனுசன் இவன்?? பணம் இருந்தா மட்டும் போதுமா! குணம் இருக்க வேண்டாமா??? ராஜேந்திரன் ஐய்யாவுக்கும் சுகுணா அம்மாவுக்கும் இப்படியொரு பிள்ளையா!!! இப்பிடி இந்த பொண்ண கஷ்டப்படுத்துறானே பாவிபய!!! விளங்குவானா இந்த ராட்சசன்” எனத் தனது முகமாற்றத்தை மறைத்துக் கொண்டு முதல் முறையாகத் தனது சின்ன எசமானன் ஷிவேந்திரனை மனதிற்குள் காய்ச்சி எடுத்தார்.

  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஷிவேந்திரனை நோக்கி “ஐயா, காலையில இருந்து சின்னம்மா சரியா சாப்பிடல, சோந்து போயிருக்காங்க! அவங்களால தனியா எந்திரிக்க முடியாதுயா.” எனத் தயங்கியவாறே கூறினார் அன்னம்மா.

  “நான் உன்னைக் கேட்டேனா” என்ற பார்வை பார்த்தான் ஷிவேந்திரன். அந்தப் பார்வையில் பயம் படர தலை குனிந்து விட்டார் அன்னம்மா.

  “என்ன எழுந்திருக்க முடியலையா? இத கூட செய்ய முடியாதவ எதுக்குடி தேனில இருந்து அவ்ளோ அவசரமா கிளம்பி வந்த??? என்னோட ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடவா??? அவ்ளோ ஆசையா மேடம் உங்களுக்கு?ம்ம்ம்” எனக் குரூரமாய் வினவினான் ஷிவேந்திரன். குப்புற விழுந்து கிடந்த புகழினி அந்தக் கேள்வியின் தாக்கத்தில் எழுந்து அமர்ந்து விட்டாள் தனது வலியை மறந்து! விக்கித்து போய் அவனைக் கண்களில் வலியுடன் நோக்கினாள். கண்களில் நீர் திரண்டு அவளின் கன்னங்களில் இறங்கி கீழே உருண்டோடியது. அன்னம்மாவிற்கு கண்களில் நீர் தேங்கிற்று.

  “ஆத்தீஈ எப்புடி கேட்டுப்புட்டாக! என் ஆயிசுக்கும் இவுக சொன்ன சொல்லு மறக்குமா! என் நெஞ்சை அறுக்குதே!!! இந்த நொண்டி சிறிக்கி உசுரு இன்னும் இத கேட்டு போவாமெ இந்தெ பாழு(ம்) உடம்பிலே ஒட்டிக்கிட்டு கிடக்கே!!!” என மனதிற்குள் நொந்து கரைந்தாள் புகழினி.

  ஷிவேந்திரனை பிரமை பிடித்தவள் போன்று பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தவாறு அவளை நெருங்கி, குனிந்து அவளது சேலை விலகியிருந்த இடது கணுக்காலில் தன்னுடைய கையில் இருந்த சிகரட்டால் அழுத்திச் சுட்டான்.

  “ஸ்ஸ்ஸா ஆஅ ஆத்தா” எனச் சட்டென உணர்வு பெற்றவளாக வலியில் தன்னையும் மீறி கத்திவிட்டாள் புகழினி.

  “ஷிவேந்திரா” என்ற கர்ஜனை சத்தம் அந்த மாளிகை முழுவதும் எதிரொலித்தது. ராஜேந்திரன் ஷிவேந்திரனை உறுத்து விழித்தபடி அவனை நோக்கி வேகமாக வந்தார். அவரின் மனைவி சுகுணா அதிர்ச்சியுடன் தனது மகனைப் பார்த்தவாறே புகழினியை நெருங்கினார்.
   
 7. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  ஒரு உருவம் கீழே ஹாலில் நடந்தவற்றை மாடியிலிருந்த ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டு கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருந்தது. ராஜேந்திரனின் கர்ஜனையில் அறைக் கதவுகள் திறக்கும் ஒலியில் தனது அறைக்குள் மின்னலென சென்று மறைந்தது அந்த உருவம்!

  ஷிவேந்திரன் நிதனமாக நிமிர்ந்து நின்றான் தனது தந்தையை அவன் திரும்பி பார்க்கவில்லை. சுகுணா ஒடி வந்து புகழினியை அணைத்துக் கொண்டார். எசமானி வந்துவிட்ட தைரியத்தில் புகழினியை நெருங்கினார் அன்னம்மா. புகழினி சுகுணாவை கண்டு மிரண்டு விழித்தாள். சுகுணாவின் காருண்யம் வழியும் கண்களை அவள் கவனிக்கவில்லை. அல்லது அதனைப் புரிந்து கொள்ள இயலாத பேதையாகி போனாளோ!

  புகழினியின் மிரட்சியைக் கண்டு அன்னம்மா “கண்ணு எசமானி அம்மாடா, ரொம்ப நல்லவங்க, நீ பயப்படதாமா! உன் மாமியார் தான்” என சுகுணாவை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

  மாமியார் என்ற வார்த்தையில் அவள் உடலில் ஓர் வித நடுக்கம் ஏற்பட்டது. அதனை சுகுணாவும், அன்னம்மாவும் புரிந்து கொண்டனர். சுகுணாவிற்கு மனம் வலித்தது, இருப்பினும் அதனை மறைத்துக் கொண்டு “அன்னம்மா போய் முதல்ல தீப்புண்னுக்கு போடற ஆயின்மண்ட்ட எடுத்துட்டுவாங்க” என்றார் மெல்லிய குரலில். “சரிம்மா” எனக் கூறி கொண்டே உள்ளே விரைந்தார் அன்னம்மா.

  ராஜேந்திரன் ஷிவேந்திரனின் முன் வந்து நின்று அவனை உறுத்தார். அவன் அசராது அவரது பார்வையை தாங்கி நின்றான். “யார் இந்த பொண்ணு??? இங்கே எப்புடி வந்துச்சி?? எதுக்கு இந்த பொண்ணுகிட்ட இப்படி நடந்துகிற??” என புகழினியௌ சுட்டிக்காடி அழுத்தமாக வினவினார்.
  “காலையில அவளுக்கு நான் யெல்லோ ரோப் தட் இஸ் தாலி கட்டினேன்!!! அப்ப அவ எனக்கு யாரு??” என நக்கலாக வினவினான். அவர் அதிர்ந்து போய் புகழினியையும் அவரது மனைவியையும் பார்த்தார். சுகுணா இமை மூடித் திறந்து அதனை உறுதிப் படுத்தினார்.

  தந்தையின் அதிர்ச்சியைக் கண்கள் மின்ன ரசித்தவாறு சிகரட்டை அவர் முகத்திற்கு நேரே ஊதினான். சுகுணாவிற்கு மகன் கணவனை அவமதிப்பதைப் பொருத்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் வாய் திறந்து கேட்க முடியாத நிலை. கேட்டால் இன்னமும் மோசமாக நடந்து கொள்வான். அதனால் அவர் மௌனம் காத்தார். ஆனால் மகன் மேல் இருந்த அவரின் பார்வையை அவர் விலக்கவில்லை. புகழினியை அணைத்து அவளின் தலை முடியைக் கோதிவிட்டார் ஆதரவாக.

  அந்த மாளிகையின் உறுப்பினர்கள் விருந்தாளிகள் வேலைக்காரர்கள் அனைவரும் அங்குக் குழுமிவிட்டனர். மேகவதி “வாட்ஸ் ஹேப்பினிங் ஹியர்?? ராஜ் இப்போ நீ எதுக்கு உயிர் போன மாதிரி கத்தின” என எரிச்சலுடன் வினவினார். பின்னே அவர் தூக்கம் கலைந்து விட்டதல்லவா!

  ராஜேந்திரன் மகன் மேல் இருந்த பார்வையை நகர்த்தவில்லை. ஷிவேந்திரனை அவர் நன்கு அறிவார். அவனது அலுவலகங்களில் கூட்டி பெருக்கும் வேலை பார்க்கும் பெண்கள் கூட அழகாக நேர்த்தியாக இருப்பார்கள். அவனுக்கு எதிலும் அழகும், ஆடம்பரமும், நேர்த்தியும் இருப்பது மிக முக்கியம். அவ்வாறான கொள்கைகளை உடையவன், எவ்வாறு இப்படி ஒரு பெண்ணை மணந்து கொண்டான் என்பது அவருக்குக் குழப்பமாக இருந்தது. மகன் பொய் சொல்ல மாட்டான் என்பது உறுதி. ஆனால் எக்காரணித்திற்காக இப்பெண்ணை மணந்திருந்தாலும், கண்டிப்பாக அவை நல்லவையாக இருக்காது என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்து இல்லை.

  ராஜேந்திரனுக்கு புகழினி அமர்ந்து இருந்தமையால் அவளின் கால் ஊனம் தெரியவில்லை. அவர் மகன் அந்தப் பெண்ணை சிகரட்டால் சுட்ட போது தான் அங்கு வந்து சேர்ந்தார். அதனைக் கண்டு மகனை நோக்கி கர்ஜித்தார். அவரை அழைத்தது அவரது மனைவியே. ஆம்! சுகுணா தான் அவரை அழைத்து வந்து. ஹாலில் நடப்பவற்றை சுட்டிக் காட்டினார்.

  பத்து நாட்கள் கழித்து இளைய மகனை காணப் போகும் ஆவலில் மாடி பால்கனியில் அமர்ந்திருந்தார் சுகுணா. காரின் சப்தம் கேட்ட உடன் ஆவலுடன் மாடி பால்கனி வழியாக எட்டி பார்த்தார். அப்பொழுது தான் ஒரு நொண்டி பெண்ணும் அன்னம்மாவும் போர்டிகோவை தாண்டி நின்றிருந்த காரிலிருந்து இறங்குவது தெரிந்தது. அவரின் முகத்தில் “யார் இந்த பொண்ணு, இந்த நேரத்தில இங்க வந்திருக்கு?? கூட அன்னம்மா வேற இருக்காங்களே?? என தீவிரமாக யோசித்தார். அப்பொழுது தனது மகனின் கார் அந்த இளம் பெண்ணின் மேல் மோவதை போல் வந்து நிற்கவும் அவர் அதிர்ந்து விட்டார். விரைவாக கீழ் தளத்திற்கு ஓடி வந்தார். மகன் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்திருக்கவும் அங்கிருந்த அலங்கார பொம்மையின் பின்னே சற்று மறைவாக நின்று கொண்டார்.

  நடப்பவகளை கண்டார். மகன் அந்தப் பெண்ணின் ஊன்றுகோலைக் காலால் தட்டிவிட்டதைக் கண்டு அதிர்ந்தவர். நொடியும் தாமதிக்காது கணவனை நாடிச் சென்றார்.
   
 8. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  அன்னம்மா ஆயின்மெண்டை சுகுணாவின் கையில் கொடுத்தார். எல்லோரும் வந்துவிட்டமையால் அவர் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. சுகுணா அவருக்கு கண் ஜாடை காட்டவும் யாரும் பார்க்காதவாறு அவர் புகழினியை மறைத்து நின்று கொண்டார். சுகுணா புகழினியின் கணுக்காலில் மருந்திட்டார் மென்மையாக. மருந்து பட்ட எரிச்சலில் ஸ்ஸ்ஸ்ஸ் என முனகினாள் புகழினி. “ஒன்னுமில்லைடா, இதோ நிமிஷத்தில காயம் ஆரிடும், இனி எரியாது பாரு” என அன்புடன் கூறினார் சுகுணா.

  ராஜேந்திரன் தனது தாயின் கேள்விக்குப் பதிலளிக்காது, மகனை யோசனையாகப் பார்த்தார். மகனின் நடவடிக்கைகளை அவர் தடுத்து நிறுத்தாவிட்டாலும்(?) அவனைக் கண்காணித்து கொண்டு தான் இருந்தார். அவர் மனைவி சுகுணா, பெரிய மகன் மற்றும் மகளின் குடும்பத்தினருடன் தொழில் தொடர்புடைய ஒரு நண்பனின் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் பேர குழந்தைகளுடன் ஊரைச் சுற்றி பார்ப்பதற்காகவும் பத்து நாட்கள் லண்டனில் சந்தோசமாக களித்துவிட்டு இன்றிரவு தான் சென்னை திரும்பினர்.

  மகன் நேற்று இரவு மதுரைக்கு ஒரு புதிய ஏழு நட்சத்திர ஹோட்டல் கட்டுமான பணி பற்றிய பிஸ்னஸ் மீட்டிங்கிற்காக சென்றிருக்கிறான் என்ற தகவல் அவருக்கு வந்தது. ஆனால் போன இடத்தில் இளைய மகன் இப்படியொரு பெண்ணை மணமுடித்து வருவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆக, அந்த மதுரை நட்சத்திர ஹோட்டல் ஒரு கண் துடைப்பு. மகனைத் திருமணம் செய்து கொள்ள காத்துக் கிடக்கும் பணக்கார யுவதிகளை அவர் அறிவார். அவர்களை விட்டுவிட்டு இந்தப் பெண்ணை! எதற்கு? ஏன்? இந்தக் கேள்விகளை மகனிடம் கேட்டால் அவருக்குப் பதில் கிடைக்காது. அதனை அவரால் அறிந்து கொள்ளவும் முடியாது. இளைய மகன் ஷிவேந்திரன் ஒரு விஷயம் வெளியே கசிய கூடாது என முடிவு செய்துவிட்டால் அது கடகளவும் கசியாது. அதுவே அந்த விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால்! உலகத்தின் ஒவ்வொரு இண்டு இடக்கிலும் அந்தச் செய்தியை பரவச் செய்வான். அவனின் சூட்சமம் அப்படி! இதனைப் பொறுத்திருந்து தான் கையாள வேண்டும், இல்லை என்றால் வந்திருக்கும் இளம் பெண்ணிற்கு சேதமாகி விடும்! என்று மனதினுள் எண்ணினார் ராஜேந்திரன்.

  எல்லோரும் குழப்பத்துடன் ராஜேந்திரனையும், ஷிவேந்திரனையும் பார்த்திருந்தனர். அன்னம்மா விலகியவுடன் புகழினியை கவனித்தனர். அனைவரின் புருவங்களும் மேலேறின! யார் இந்தப் பெண் மணக் கோலத்தில் சுபிக்ஷத்தில் ஹாலில் தரையில் அமர்ந்து விசும்பிகிறாள்? சுகுணா அவளை அரவணைத்து தலை கோதுகிறார் என்ற கேள்விகள் அனைவரின் மனத்திலும் எழுந்தது.

  மேகவதியும் புகழினியை கவனித்து விட்டு, மகன் ராஜேந்திரன் யோசனையில் இருப்பதைப் பார்த்துவிட்டு அன்னம்மாவிடம் திரும்பினார். அவருக்குத் தெரியும் ஷிவேந்திரன் அவரை மதித்து பதில் சொல்ல மாட்டான் என்று. “ஏய் அன்னம்மா, யார் இந்த பட்டிக்காடு?? இவ ஏன் நடு ஹால்ல உக்காந்து அழுவுறா?? யாரு இவளை இந்த நைட் டைம்ல இங்க கூட்டிட்டு வந்தது?? என்ன முழிக்கிற பதில் சொல்லு” என அன்னம்மாவை சரமாரியாகக் கேள்வி கனைகளால் தாக்கி அதட்டினார். மகனிடமும் பேரனிடமும் செல்லாத தனது ஆளுமையை வீட்டு வேலைக்காரியிடம் காட்டினார்.

  அன்னம்மாவின் சந்தேகம் நிரூபணம் ஆகிவிட்டது. “ஆக, தாத்தனும் பேரனும் யாருக்கும் தெரியாம இந்தக் கல்யாணத்தை நடத்தி இருக்காங்க! நான் வாய் திறந்தா என்னைக் கொல்ல கூட தயங்கமாட்டங்க தாத்தனும் பேரனும்!” என மனதினில் பய பந்து உருள வாயை இறுக மூடிக் கொண்டு தலை குனிந்தார்.

  அன்னம்மாவிடம் இருந்து விஷயம் வராது என்பதைப் புரிந்து கொண்ட மேகவதி மகள் வசுந்தராவிற்கு கண் ஜாடை காட்டினார். வசுந்தரா வேகமாக புகழினியின் அருகில் சென்று அவளின் தலையை நிமிர்த்தி “ஏய்! யாருடி நீ” என அகங்காரமாய் வினவினார். வசுந்தராவிற்கு புகழினியின் மனக் கோலம் சிறு உறுத்தலை ஏற்படுத்தியது.


  “ஆண்டி” என உறுமினான் ஷிவேந்திரன். அவனின் உறுமலில் சட்டென்று தனது கையை புகழினியின் மேலிருந்து விலக்கிக் கொண்டார் வசுந்தரா.

  ஷிவேந்திரன் வேகமாக புகழினியின் அருகில் சென்றான். அன்னம்மா பயந்து பின்வாங்கினார். சுகுணா ஆதங்கத்துடன் மகனைப் பார்த்தார். ஆனால் அவர் மகன் அவரைக் கண்ணுற்றால் தானே! புகழினியை இடது கையால் சட்டென்று தூக்கி நிறுத்தினான். தள்ளித் தான் பிடிந்திருந்தான் அவளை! அவள் நிற்க முடியாமல் தடுமாறுவதை கண்டு சுகுணா புகழினியை தாங்க நெருங்கினார், மகனின் அழுத்தமான பார்வையில் தேங்கி விட்டார்.

  ஹாலில் குழுமியிருந்த அனைவரையும் தனது கூரிய விழிகளால் அளந்துவிட்டு தனது ஆளுமையான குரலில் “இவ பேர் கருப்பி, என்னோட வைஃப்! அன்னஃபிஷியல் வைஃப்” எனத் தெளிவாக கூறினான். அன்ஃபிஷியல் வைஃப் என்ற வார்த்தையைத் தந்தையை ஆழ்ந்து பார்த்து கொண்டே அழுத்திக் கூறினான்.

  அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை. என்னது இந்தப் பெண் ஷிவ்வின் மனைவியா?? கருப்பாக, ஒல்லியாக, குள்ளமாக, நொண்டியாக இருக்கும் இவள் ஆணழகன் ஷிவ்வின் மனைவியா???
  என அதிர்ந்து தான் போயினர். இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!!! அப்பனை போல் இருந்து வைக்கிறான். அவனாவது சற்று பார்க்கக் கூடிய ஒருத்தியை மனைவி என்று அழைத்துக் கொண்டு வந்தான். இவன் என்னடாவென்றால் இப்படி ஒருத்தியை மனைவி என்கிறான். அன்னஃபிஷியல் வைஃப் என்பதில் அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
   
 9. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  அனைவரின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் கண்ணுற்றவன், தந்தையின் முகத்தில் இருந்த வெறுப்பையும் தாயின் முகத்தில் இருந்த வெறுமையையும் அமைதியாகப் பார்த்தான். சட்டென புகழினியின் மேலிருந்த தனது இடது கையை எடுத்துவிட்டான். புகழினி இரண்டாவது முறையாக அவனால் நிலை தடுமாறி தரையில் சரிந்தாள்.

  ராஜேந்திரன் ஷிவ்வின் செயல்களைப் பொறுக்க இயலாது மகனின் சட்டையை பிடித்துவிட்டார். ஊனமான பெண்ணை மகன் மனைவி அதுவும் எந்த மாதிரி மனைவி என்று அந்த பாவப்பட்ட பெண்ணை அறிமுகப் படுத்தினான். அவளை சிகரட்டால் சுட்டு, இப்பொழுது எல்லோரின் முன்னிலையில் அவளைக் கீழே தள்ளிவிட்டு ஒன்றும் நடவாதது போல் அரக்கத்தனமாக நடந்து கொள்ளும் மகனைக் கேள்வி கேட்காமல் இனியும் விட்டு வைத்தால் ஆபத்தாகிவிடும் என எண்ணினார்.

  “ஹவ் டேர், ஹவ் டேர் யு! அந்த பொண்ணை அன்ஃபிஷியல் வைஃப்னு சொல்ற! கேக்கிறத்துக்கு யாரும் இல்லைனு நினச்சியா? நான் இருக்கேண்டா! உன் அப்பன்டா நான்! என்கிட்டயே உன் வேலைய காட்டுறியா. நீ எது செஞ்சாலும் பொருத்து போவேன்னு நினைச்சியா. சொல்லுடா என்ன பிளான் பண்ற?? எதுக்கு இந்த அப்பாவி பொண்ணை கல்யாணம் பண்ண??” என ஷிவ்வின் சட்டையை பிடித்து உலுக்கியவாறே அவனைக் கேள்விகளால் துளைத்தார் ராஜேந்திரன்.

  தந்தையின் கைகளை எளிதாகத் தட்டிவிட்டு தன்னுடைய சட்டையை சரி செய்து கொண்டு, அவரை அலட்சியமா நோக்கிய படி அங்கிருந்த ஒற்றை சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான். தனது பேண்ட் பாக்கட்டில் இருந்த சிகரட் கேசில் இருந்த சிகரட் ஒன்றை உருவி லைட்டரை கொண்டு அதனைப் பற்ற வைத்தான். புகையை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டு நிதனமாக அதனை வெளியேற்றினான். பிறகு அனைவரையும் பார்த்துவிட்டு தந்தையைக் கூர்மையாக நோக்கினான்.

  “வீட்ல யாருக்கும் தெரியாமா தான நீங்க மேரஜ் பண்ணிக்கிட்டிங்க, உங்க சன் நானும் அதே போல தான் பண்ணிக்கிட்டேன். வாட்ஸ் ராங் இன் தட். ஒரு சின்ன சேன்ஜ்! நீங்க ஏக பத்தினி விரதன், நான் ஏகப்பட்ட பத்தினிங்களோட விரதன்! தட்ஸ் இட்” எனத் தனது தந்தையைப் பார்த்து கண்ணடித்துக் கூறினான்.

  “ஷிவா” என்று கத்தினார் ராஜேந்திரன். அவருக்குப் பதட்டமாக இருந்தது. இளைய மகனின் மதுப் பழக்கமும் புகை பிடிக்கும் பழக்கமும் மனைவி அறிந்ததே. ஆனால் மாதுகளுடன் தனது மகன் சல்லாபிக்கிறான் என்பது அவருக்கு இன்றளவும் தெரியாது. இன்று அது வெளிப்பட்டு விட்டதில் அவரின் மனம் சஞ்சலம் உற்றது. அவசரமாக மனைவியைத் திரும்பி பார்த்தார். மனைவி சுகுணாவின் அதிர்ந்த தோற்றம் அவருக்குக் கவலையை கொடுத்தது. ஷிவ் கவலையற்றவனாகப் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.

  “நீ மேரஜ் பண்ணிக்கிட்டது தப்புனு சொல்லல, இந்த பொண்ண என்ன ரீசன்காக மேரஜ் பண்ணிக்கிட்ட?? உன்னோட டேஸ்ட் ஐடியாலஜிஸ் எல்லாருக்கும் தெரியும் ஷிவ்?? பட் வைய் திஸ் டைப் அஃப் கர்ள்??” என வினவினான் விஷ்வேந்திரன் ஷிவேந்திரனின் அண்ணன்.

  “விஷ்னு ஃபாரின் ஸ்காட்ச் குடிச்சாலும் நாட்டு சரக்கான கள்ளு குடிக்கிறதுல இருக்க கிக்கே தனிதான் இல்லையா. ஐ வான் டு டேஸ்ட் தி டேஸினஸ் மேன். உனக்கு தெரியாததா? நாட்டு சரக்குன்னா உனக்கு உயிராச்சேடா!” என விஷமமாகத் தமையனை பார்த்துக் கண்ணடித்து வினவினான் ஷிவேந்திரன். தம்பியைப் பற்றி தெரிந்தும் தலையை கொடுத்த தன்னை மனதிற்குள் குட்டி கொண்டு வாயை இறுக மூடிக் கொண்டான் விஷ்னு. மனதில் சிறு சந்தேகம் எழ மனைவியை லேசாகத் திரும்பி பார்த்தான். அதிர்ந்துவிட்டான்!


  மனைவி ஷில்பாவின் அனல் பார்வையில் அவனுக்கு குலை நடுங்கியது “ஷிவ்வ்வ்வ்! பாவி பய போட்டு குடுத்துட்டானே. காலேஜ் டேஸ்ல அடக்கமான கிராமத்து பொண்ணுனு ஒருத்திக்கிட்ட பழகினேன். ஒரே ஒரு நாள் கொஞ்சம் எல்லை மீறிட்டேன். அதுவும் பெருசா ஒன்னும் பண்ணல! சும்மா ஒரு ஹக்கும் கிஸ்ஸும் தான். நான் என்னம்மோ அந்த பொண்ணு கூட குடும்பம் நடத்தின மாதிரியே பேசுறானே!! இவன் எல்லா தப்பையும் பண்றான்! இவன கேக்க இங்க ஒரு நாதியும் இல்ல! ஆனா நான் ஒன்னும் பண்ணலனாலும் என்ன ரவுண்டு கட்டி டின் கட்டறாங்களே! இது எந்த விதத்துல நியாயம்?? நான் பொறந்த நேரம் சரியில்லை. இன்னைக்கு என் பொண்டாட்டி என்ன அடி பின்ன போறா. மினிஸ்டர் பொண்ண கல்யாணம் பண்ணி நான் தினமும் மிதி வாங்குறேன்.” என மனதிற்குள் புலம்பினான் விஷ்னு.

  விஷ்னு மனைவியை நோக்கி அசட்டுச் சிரிப்பொன்றை சிரித்தான். ஷில்பா அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு. மாடிப்படிகளில் ஏறி தங்கள் அறையை நோக்கிச் சென்றுவிட்டாள். இப்பொழுது தான் மனைவியை சமாதானப்படுத்தவில்லை என்றால் தன் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து, மனைவியைத் தொடர்ந்து சென்றுவிட்டான்.

  ஷிவேந்திரன் அண்ணன் விஷ்னு அண்ணி ஷில்பாவிடம் பம்புவதை அறிவான். தன்னையே எதிர்த்து அண்ணன் இன்று கேள்வி கேட்டதும், இருடா உன்ன கதறவிடுறேன் என்று எண்ணிக் கொண்டு தனக்குத் தெரிந்த ஒரு சிறு விஷயத்தை பெரியதாக உருவகித்து கொளுத்திப் போட்டான். அது பற்றிக் கொண்டது! மகனே என்கிட்ட இனிமே வருவ!!! என மனதினில் எக்காளமிட்டான்.
   
 10. SPD

  SPD Well-Known Member

  Joined:
  Aug 7, 2017
  Messages:
  549
  “ஷிவ்! வாட் ஹேவ் யு டன்? என்னோட நாத்தனார தானே உனக்கு மேரஜ் பண்றதா பேசிக்கிட்டு இருக்காங்க! நீ எப்படி இப்படியொரு வேலைய பண்ணிட்டு கூலா இருக்க?” எனப் பொருமினாள் ரூபாதேவி ஷிவேந்திரனின் அக்கா. தனது மாமியார் வீட்டில் தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்த நாத்தனார் ரஞ்சனாவை தம்பிக்கு கட்டி வைத்துவிட வேண்டும் எனப் பிரியப்பட்டாள். ஏகப்பட்ட கணவன் வீட்டுச் சொத்துக்களை ரஞ்சனாவிற்கு கொடுப்பதில் அவளுக்குப் பிடிக்கவில்லை. அதோடு பிறந்த வீட்டுச் சொத்தும் தனது ஆளுகைக்குள் வர வேண்டும் என எண்ணினாள். அதற்கு ரஞ்சனா ஷிவேந்திரனை மனக்க வேண்டும். தன் உடன் பிறப்பை பற்றித் தெரிந்தும் அற்ப ஆசையை மனதிற்குள் வளர்த்துக் கொண்டாள். பைத்தியக்காரி!

  “ரூபா என் லைஃப டிசைட் பண்றதுக்கு நீ யாரு?? ஹூ கேவ் யு தி ரைட்ஸ்?? என்னோட அஃபிஷியல் வைஃப் வரதுக்கு ஒரு ஸ்டேடஸ் வேணும் அத மைண்டல வச்சிக்க! புரியுதா” என அழுத்தமாகக் கூறினான். ஓரக் கண்ணால் தமக்கையின் கணவன் ஆதர்ஷை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். தன்னை எப்படியாவது அவரது தங்கைக்கு மணமுடித்து விடவேண்டும் என்று விடாமல் முரண்டு பிடிப்பவர். இன்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாயிற்று!

  “ரூபா” என அடிக்குரலில் சீறினார் ஆதர்ஷ். ரூபாவிற்கு தம்பி ஷிவேந்திரன் பேசியதைக் கேட்டு உள்ளம் கொதித்தது. ஆனால் கணவனை எண்ணி அதனை மறைத்தாள்.

  “என்ன இன்னும் வேடிக்க பாக்குற?? அதான் உன் பிரதர் சொல்லிட்டாறே நமக்கு ஸ்டேடஸ் இல்லன்னு?? வாட் ஃபார் யு ஆர் வெயிடிங்?? சீக்கிரம் பசங்கள கூட்டிட்டு நாம்ப கிளம்பளாம் கம்!” என்று வார்த்தைகளைக் கடித்து துப்பினார் ஆதர்ஷ்.

  கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத் தலையசைத்து மாடிப்படிகளில் ஏறி விட்டார். அதர்ஷ் மனைவியைப் பின் தொடர்ந்தார்.

  “ஷிவா ரூபா உன் அக்கா, ஆதர்ஷ் மாப்பிளை உன்னோட அத்தான். ஏன் இப்படி அவங்கள எடுத்தெரிஞ்சு பேசுற. உனக்கு அவரோட சிஸ்டர மேரஜ் பண்ணிக்க இஷ்டமில்லைன்னா அத நாசுக்கா சொல்லிருக்கலாமே!! யாரும் கம்பெல் பண்ணல. ஏன் இல் டிரீட் பண்ணுற அவங்கள?” என மனம் தாளாமல் கேட்டுவிட்டார் ராஜேந்திரன்.

  ஷிவேந்திரன் தந்தை ராஜேந்திரனை ஆழ்ந்து நோக்கினான். அந்தப் பார்வையில் ஸ்தம்பித்து விட்டார். என்னைக் கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கு என்ற பார்வை தான் அது. தான் தன் தங்கையையும் தங்கை கணவனையும் மதிக்கவில்லை என்பதைச் சுட்டி காட்டும் பார்வை. ரூபா சற்று சுயநலமிக்கவள் தான் ஆனால் வசுந்தரவை போல அபாயகரமானவள் இல்லையே அவள்! ஆதர்ஷ் பந்தா பேர்வழி தான் ஆனால் தன் தங்கை கணவன் ரகுவை போல பணம் பிடுங்கபவர் இல்லையே!

  மேகவதி வசுந்தரா விமன்யா மூவரும் ஹாலின் மறுகோடியில் நின்று கொண்டு சன்னமான குரலில் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். “மாம் இந்த ரூபாவுக்கு ஆசைய பாரேன், அவளோட சிஸ்டர் இன்லாவ ஷிவ்வுக்கு மேரஜ் பண்ணி வைக்கனும்மா? எவ்ளோ தெளிவா பிளான் போடறா பாருங்க!” எனப் பொருமினார் வசுந்தரா.

  “ஷிவ் ஒரே போடா போட்டுட்டான்ல! அவ ஸ்டேடஸ் இக்குவல் இல்லைனு. நீ வொரி பண்ணிக்காத வசு, விமன்யா தான் ஷிவ்வோட வைஃப். அது கண்டிப்பா நடக்கும்.” என மகளுக்கு தைரியம் ஊட்டினார் மேகவதி.

  “பாட்டி நான் ஷிவ் அத்தான மேரஜ் பண்றது இருக்கட்டும்! மொதல்ல பொண்டாட்டினு சொல்லிட்டு ஒரு பிளாக் மங்கி வந்து இருக்கே! அத என்ன பண்றத??” என வினவினாள் விமன்யா.
  “ஹா நீ பாத்த தானே விம்மி எப்டி அவள இன்செல்ட் பண்ணானு! அவ இங்க ஒரு வேலைக்காரியா தான் இருப்பா! நீ வேனா பாரு! ஷிவ் அவள அப்படி தான் நிறுத்துவான்.” என பதிலுறைத்தார் மேகவதி.

  “டோண்ட் பி ஸில்லி மாம். ஷிவ்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு தன்னை சேந்தவங்கள அவன் என்னவேனா பண்ணுவான். ஆனா மத்தவங்கள் நெருங்க விடமாட்டான். இப்ப கூட நான் அந்த பொண்ணு தலைய பிடிச்சோனே ஆண்டினு கத்தினான். கேட்டிங்கதானே! அவன சீண்டினா அவன் அவ கூட தயங்காம வாழ்ந்துடுவான்” என சரியாக கணித்து கூறினாள் வசுந்தரா. எங்கே அடித்தால் எங்கே வலிக்கும் என்று அவளுக்கு தெரியாதா!

  “எஸ் மாம் நீங்க சொல்றது ரொம்ப கரைக்ட்! அந்தத் திமிர் பிடிச்சவன் நீங்க சொல்றதையும் செய்வான். அதுக்கு மேலயும் செய்வான்” என பயந்தவாறு கூறினாள் விமன்யா. பின்னே ஷிவேந்திரனை திருமணம் செய்ய வேண்டும் என்பது தானே அவளுடைய வாழ்நாள் லட்சியம். அதனை நிறைவேற்றுவதற்கு அவள் பிரம்ம பிரார்த்தனை செய்கிறாள். ஆனால் ஒரே பார்வையில் தள்ளி நிறுத்துபவனிடம் அவளின் மாய்மால வேலைகள் செல்லுபடியாக வில்லை. இருப்பினும் விடாது முயற்சிக்கிறாள்! விக்கிரமாதித்தன் வேதாளத்தைத் துரத்தி பிடிக்கும் கதையாக!
   
Thread Status:
Not open for further replies.

Share This Page