Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

Kannammarvrv's-Seyyaatha Maadhavam Neeye-Story Thread

Discussion in 'Kannammarvrv's Novels' started by Srikala, Oct 18, 2017.

Thread Status:
Not open for further replies.
  1. Srikala

    Srikala 'பெண்சகி' - 24வது நாவல் :)

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    5,219
    ஹாய் பிரெண்ட்ஸ்,

    இதோ நமது தளத்திற்கு மற்றுமொரு புதுத் தோழி ஒருவரை கதை எழுதுவதற்காக அழைத்து வந்திருக்கிறேன்... அவருக்கு எழுத்தாளர் அவதாரம் தான் புதிது... ஆனால் அவருக்கு எழுத்துக்கள் புதிதல்ல.. விமர்சனம், கவிதைகள் எழுதுவதில் வித்தகர்... நச்சுன்னு நாலு வரியில் நாலாயிரம் பக்கங்கள் நிறைந்த கதையை அசத்தலாய் விமர்சனம் செய்வதில் வல்லவர்... இப்படி இவரைப் பற்றி நிறையச் சொல்லி கொண்டே போகலாம்... நான் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்... அவரே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார்... காத்திருங்கள்...

    தலைப்பு : 'செய்யாத மாதவம் நீயே'
    ஆசிரியர் : கண்ணம்மாrvrv


    எல்லோருக்கும் நல்கும் ஆதரவை இவருக்கும் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்... உங்களது கருத்துக்கள் தான் எழுத்தாளருக்கான உந்துசக்தி... தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளியுங்கள்...

    அன்புடன்,
    ஶ்ரீகலா :)
     
  2. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    எல்லாருக்கும் வணக்கம் மக்கா


    எப்படி இருக்கீங்க? எல்லாரும்..

    ஹெய் யார் நீ? என்ன வேணும் உனக்கு அப்படின்னு கேக்குறீங்களா நான் கண்ணம்மாங்க என்னை எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியாதுங்க ஆனா நிறைய பேரை நான் தெரிஞ்சி வச்சிருக்கேன் அவங்க எல்லாருமே நல்ல உள்ளங்களா கிடைச்சது எனக்கு கிடைச்ச வரம்


    இப்போ என்ன சொல்லவர வெரசா சொல்லுன்னு நீங்க எல்லாம் சொல்ல வரது புரியுது பட் என்ன செய்றது நான் உங்க நட்பா போய்ட்டேன் சோ என்னோட இம்சயை பொறுத்துக்கதான் வேணும்


    ஓகேஓகே நீங்க எல்லாரும் கல்லை தூக்கிட்டு வரதுக்குள்ள சொல்றதை சொல்லி முடிச்சிடுறேன்


    நானும் கதை எழுதலாம்னு முடிவெடுத்துட்டேங்க. இது என்னோட முதல் விபரீத முயற்சிங்க. அதுக்கு உங்க ஆதரவு எனக்கு வேணுமுங்க அம்புட்டு தாங்க நான் சொல்ல வந்தது படிச்சிட்டு பாராட்டுறதையும் கழுவி ஊத்துறதையும் எதுவா இருந்தாலும் ஒரு வார்த்தை கதையை படிச்சிட்டு சொல்லுங்க


    நான் கேட்டதும் திரெட் ஓபன் பண்ணி கொடுத்த ஸ்ரீமா வை நன்றி னு ஒரு வார்த்தையால தள்ளி வைக்க விரும்பலைங்க ஏன்னா அவங்களை நான் நட்பா பாக்குறதுக்கு முன்னாடி ஒரு ரைட்டர்ரா எனக்கு தெரியும்..அவங்க கதைகளை படிச்சி “என்னா ரைட்டர் டா சாமி” அப்பிடி வாயை பிளந்து பிரம்மிச்சி பாத்தவங்க நானு, என்னையும் நம்ம கூட்டுல சேத்துக்கிட்டதுக்கு சோ லவ் யூ சோ மச் ஸ்ரீமா



    அடுத்து என்னோட பாப்பா (தீபாஷ்வினி), என்னோட மச்சி (மோஹி), என்னோட டார்லு (பிரிக்குட்டி )என்னோட டியர் (பத்து )
    என்னோட இவளே (மீனு) இவங்களுக்கு நிறைய நிறைய லவ் யு , லவ் யு ஏன்னா எனக்கு தோணின சின்ன ஸ்பார்க் வெச்சி எழுதின அரைகுறை டீசரை இவங்க கிட்ட தான் நான் அனுப்பி கொலையா கொன்னேன்... ஆனாலும் சும்மா சொல்ல கூடாது அதை படிச்சிட்டு கழுவி ஊத்தாம கரெக்ஷன் சொன்னாங்க அதனால தைரியமா களத்துல இறங்கிட்டேன்...

    அப்புறம் மொத மொத நீயும் கதை எழுதலாமே மாப்பி னு கேட்ட என்னோட மாப்பி வான்மதி ஹரி , என்னோட குரு லக்ஸ் , வாழ்த்து சொன்ன என்னோட ரவுடி மருமக , பிரேம்குட்டு , பவோ குட்டி , மீனுக்குட்டி , ஹனி பேபி , இஷி பேபி , ஷானு பேபி இவங்களுக்கு இறுக்க கட்டிபுடிச்சி உம்மா...

    எம்மா இன்னும் எத்தனை பேரு வஞ்சமில்லாம சொல்லிட்டு இருக்க னு கேக்குறது புரியுது ஹிஹிஹிஹி


    இப்போ கதைக்கு வாரேன் கதையோட பேரு

    செய்யாத மாதவம் நீயே

    ஹீரோ : மகிழ் வேந்தன்

    ஹீரோயின்: சாகரிகா


    மனசுமுழுக்க காதலை மட்டுமே வெச்சிருந்தாலும் அதை வெளிப்படுத்தாத ஹீரோ

    மனசுமுழுக்க காதலை வெச்சிருந்தாலும் கோவத்தை மட்டுமே வெளிப்படுத்துற ஹீரோயின்


    அவன் காதலை வெளிப்படுத்தினானா அவளோட கோவத்தை போக்கி காதல் ல ஜெயிச்சானா அப்பிடின்னு கதைல என்னோட ரசனை கலந்து குடுக்க முயற்சி செஞ்சிருக்கேன்

    இவங்க மட்டும் தான் கதைல இருக்காங்களா அப்பிடின்னு கேக்குறீங்களா இல்லைங்க இவங்களை சுத்தி நெறய கதாபாத்திரங்கள் இருக்காங்க அவங்களை கதையோட ஓட்டத்திலே பாத்து தெரிஞ்சிப்பீங்க

    வர சனிக்கிழமை டீசேரோட வரேன் மக்கா கல்லு அருவா கத்தி கடப்பாரையோட ரெடி யா இருங்க நானும் டான்னு வந்துருவேன் ஹிஹிஹிஹி
     
  3. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா

    எப்பிடி இருக்கீங்க???எல்லாரும்..

    பாத்திங்களா சொன்ன மாறியே டான்ன்னு வந்துட்டேன் அவ்ளோ பொறுப்பா நீ அப்பிடி லாம் கேக்கப்டாது ஏன்னா பேசிக்கலி நான் கொஞ்சம் பொறுப்பு தாங்க ஹிஹிஹி... சரி சரி காண்டாகாதிங்க மேட்டெர்க்கு வரேன்


    டீஸர் போட்டுட்டேன் இந்த டீஸர் படிக்கும் போதே உங்களுக்கு புரிஞ்சிடும் ரெண்டு பேரோட குணம் என்ன னு படிச்சி பாத்துட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க


    அப்புறம் என்னோட முன்னோட்டத்தை மதிச்சு படிச்சிட்டு சைலன்ட் ஆஹ் இருந்தவர்களுக்கும் , லைக் போட்டவங்களுக்கும் , கம்மெண்ட் பண்ணவங்களுக்கும் , ரொம்ப பெரிய நன்றிங்க இதே மாறி உங்க ஆதரவை எனக்கு எப்போவும் தரணும் சாமீயோவ்வ்

    அப்புறம் இன்னொரு விஷயங்க கதையோட அப்டேட் வாரம் செவ்வாய்கிழமை , வெள்ளிக்கிழமை ரெண்டு நாள் உங்களை தேடி வரும் னு சொல்லிக்கிட்டு நான் உத்தரவு வாங்கிக்கிறேனுங்க

    இப்படிக்கு சேட்டையுடன்
    உங்கள் கண்ணம்மா
     
    Jansi, sajee, Indhukarthik and 22 others like this.
  4. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    செய்யாத மாதவம் நீயே


    லிப்பிட்டிலிருந்து வெளி வரும்போதே... கோபத்தால் நுனிமூக்கு சிவக்க... கண்களில் பொறாமையுடன்... வேக எட்டெடுத்து வந்துகொண்டிருந்த சாகரிகாவை பார்த்தவன் பார்த்தவண்ணமே நின்று கொண்டிருந்தான் வேந்தன்...


    "என்ன நடக்குது இங்க??? ஏன் இப்பிடி சத்தம் போறீங்க??? கோபம் அனல் பறக்க மூச்சு வாங்க கேட்டவள்....
    "நீங்க எப்பிடி இங்க வந்தீங்க??.... யார் உங்களை இங்க கூட்டிகிட்டு வந்தது... ம்ம்" என குரலை உயர்த்தி கேட்டு கொண்டே அருகில் வந்தாள்....


    வேந்தனை சூழ்ந்து கொண்டு சிரித்து பேசி கொண்டிருந்த கல்லூரி பெண்கள்
    திடீர் என கேட்ட அவளது குரலில் அதிர்ந்து செய்வதறியாது திகைத்து நிற்க கண்டு கொள்ளாது அங்கிருந்தவர்களை பார்த்து "உங்க யாருக்கும் அறிவில்லையா.... சொல்றது காதுல விழல.... எல்லாரும் மேல போங்க ம்ம் கிளம்புங்க..." என அப்பெண்களை விரட்டி விட்டு... அவன் பக்கம் திரும்பியவளுக்கு அவனின் சிரித்த முகம் இன்னும் அதிக கோவத்தை கிளறியது...


    அவனை காயப்படுத்திட வேண்டும் என எண்ணம் எழ... நிதானமாக அவனருகில் வந்தவள்... நேராக அவன் கண்களை பார்த்து... "உங்க வெளிநாட்டு பழக்கத்தையெல்லாம் உங்களோட நிறுத்திக்கோங்க மிஸ்டர் வேந்தன்.... இங்க கொண்டு வர நினைக்காதிங்க... அது ஒரு காலமும் நடக்காது... நான் நடத்தவும் விடமாட்டேன்..." என அவனை உறுத்து விழித்து கொண்டே சொல்லிவிட்டு திரும்பி வேகமாக சென்று விட்டாள்....


    தான் பேசிய விதம் சிறுபிள்ளை தனமாக தோன்றினாலும்... காலையிலிருந்து இத்தருணம் வரை பார்த்துக்கொண்டிருந்த வீடியோ அவளை நன்கு உசுப்பேற்றி விட்டிருக்க... அதற்கு தகுந்தவாறு அனைத்தும் நடந்து கொண்டிருக்க... பொறுமை இழந்து இவ்வாறு பழி சுமத்தி விட்டாள் சாகரிகா...


    அந்த ரணகளத்திலும் தன் முகத்திற்கு நேராக... கோவத்தில் ஜொலித்த அவளின் முக அழகை ரசித்து கொண்டிருந்தவனுக்கு... அவள் சொல்லி சென்ற வார்த்தையின் தாக்கம் தாமதமாகவே வந்தடைய உடல் இருகியவன்... சற்றும் தாமதிக்காது பின்னோடே அவளின் அறைக்கு சென்றான்...



    படாரென அறைகதவை திறந்து உள்ளே சென்ற வேந்தனுக்கு... சேரில் உட்கார்ந்து கொண்டு... மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க... தன் கோவத்தை நிலை நிறுத்தி கொண்டிருந்த ரிகாவின் நிலை கண்ணில் பட... பெருமூச்செடுத்து அவனின் கோவத்தை அடக்கி கொண்டு அவளிடம் சென்றவன் நிதானமாக...


    "வாட்ஸ் ராங் வித் யூ சகி... என்ன பேசுற னு தெரிஞ்சி தான் பேசுறியா" என கேட்க...


    கோபமாக இருக்கும் போதும் அவனின் அழைப்பில் உருகும் உள்ளத்தை நினைத்து எரிச்சலடைந்தவள் மறைக்காது முகத்தில் காட்டியவாறு அவனின் முன்பு லெட்டர்பேட்டை தூக்கி போட்டு "என்ன ராங் னு கேட்டல்ல இது தான் ராங்" என சொல்ல...


    எடுத்து படித்து பார்த்தவனுக்கு ஒன்றும் புரியாமல்... "இது அசிட்டேன்ட அனலிஸ்ட்கான நேம் லிஸ்ட் தானே இதுக்கென்ன".... என புரியாமல் கேட்க


    "பெயர் லிஸ்டை படி" என சொல்லி விட்டு எழுந்தவள்... பின்னால் இருக்கும் ஜன்னலின் அருகே நின்று... வெளியே பார்த்தவாறு நின்று கொண்டாள்..


    மறுபடியும் பெயரை பார்த்தவன்... புரிந்து கொண்டு "ரொம்ப சீப் ஆஹ் பேசுற சகி... உங்கிட்ட நான் இதை எதிர்பாக்கலை... வேணாம் நான் ரொம்ப பொறுமையா இருக்கேன்... என் பொறுமையை சோதிக்காத..." என கோவமாக பேச...


    தலை திருப்பி அவனை உறுத்து பார்த்தவாறே "சீப் மெண்டாலிட்டி எனக்கில்லை உனக்கு தான்... அதனால தான் ஒன்லி லேடீஸ் நேம் ஆஹ் மேன்ஷன் பண்ணி இருக்க..." என வார்த்தையால் தாக்கினாள்...


    "டோன்ட் பி சில்லி சாகரிகா... இவங்களை தேர்ந்தெடுக்கிறது என்னோட வேலை இல்ல னு உனக்கு நல்லாவே தெரியும்.... அதுவுமில்லாம இவங்க யாருமே இல்லனாலும்... என்னால இந்த ப்ரொஜெக்ட்டை தனியா ரன் பண்ற திறமை என்கிட்ட இருக்கு... அது உனக்கும் ரொம்ப நல்லாவே தெரியும்"... என அவளை கூர்மையாக பார்த்துக்கொண்டே சொல்ல...


    அவனின்பார்வை வீச்சு தாங்காது... தலை திரும்பியவளிடம் வந்தவன்...
    "ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற சகி.... வா வந்து உக்காரு... என கையை பிடிக்க வர... அவள் பின்னால் நகர்ந்து கையை தள்ளி கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க...


    புரிந்து கொண்டவன் ஓகே ஓகே நான் தொடலை இந்தா தண்ணிய மொதல்ல குடி"... என தண்ணீர் கிளாஸை கொண்டு வந்தவன்... அவள் வாங்காததை அடுத்து அவளின் எதிப்பையும் மறந்து வாயில் வைத்து புகட்ட வர...


    "நோஓஓஓஓ.... நோ டோன்ட் டச் மீ..." என கத்தி கொண்டே கிளாஸை தட்டி விட்டு... முகத்தை திருப்பி கொண்டாள்... அது மேஜை மேலிருந்த லேப்டாப்பின் மேல் விழுந்து சிதற.... அவள் அத்தனை நேரம் பார்த்துக்கொண்டிருந்த வீடியோ ஒளிபரப்பாக அதை பார்த்தவன் ஒரு நொடி இன்பமாக உறைந்தான்.... அடுத்த நொடி அவனை கட்டுப்படுத்த முடியாது கண்களில் ஒளி மின்ன மையலுடன் அவளை நெருங்கியவன் " சகி " என கரகரப்பான குரலில் அழைத்தான்


    அவன் அழைப்பு காதில் விழுந்தாலும் திரும்பாது முகத்தை வெளிப்பக்கம் பார்த்து கண்களை மூடி கொண்டு... உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உடல் நடுங்க நின்றிருந்தவளை... அவளின் தோள் பற்றி தன் பக்கம் திருப்பினான்...



    இரண்டு கைகளாலும் அவளின் கன்னங்களை தாங்கி முகத்தை நிமிர்த்தியவன்.... மூடி இருந்த கண்களின் மேல் முத்தமிட்டு "என்னை பாரு சகி.." என கிறக்கமாக குரலில் சொல்ல கண்திறந்தவளின் கண்ணோடு கண் கலக்க விட்டு முகத்தை அருகில் கொண்டு வந்தவன்... கட்டை விரலால் துடிக்கும் செவ்விதழ்களின் மென்மையை தடவி ஸ்பரிசித்தவாறே....." கண்ணம்மா " என உயிர் உருக்கும் குரலில் அழைத்துக்கொண்டு... அவளின் முகம் நோக்கி குனிந்தான்...



    அவன் அருகில் வரும்போதே... உள்ளுக்குள் தடுமாற ஆரம்பித்தவளுக்கு... அவன் குரல் வித்யாசம் மயக்கம் கொடுக்க... விரல் தந்த ஸ்பரிசம் நிலை குலைய வைக்க.... மனம் கிறங்க ஆரம்பிக்கும் தருணம்...



    அவனின் உயிர் உருகும் அழைப்பில்
    உடல் விறைத்தவள்... அடுத்த நொடி அவளின் மாயவலை அறுபட... தினமும் அவளை உயிரோடு கொள்ளும் நினைவலைகள் மேலெழும்ப... அவனின் நெஞ்சின் மேல் கை வைத்து தள்ளிவிட்டாள்....


    சற்றும்எதிர்பார்க்காத அவளின் செயலில் சற்று நிலை தடுமாறியவன்... சட்டென தன்னை நிலை நிறுத்தி கொண்டு... “சகி”என அழைத்து கொண்டே மறுபடியும் அவளருகில் வர....



    “அங்கேயே நில்லுங்க மிஸ்டர் வேந்தன்.... கிட்ட வந்தீங்க நான் என்ன செய்வேன் னு எனக்கே தெரியாது... என கைவிரல்கள் நீட்டி அவனை தடுத்து கொண்டே கோபத்தோடு கத்தினாள்...



    ஒரு நிமிடத்தில் தன்னை இழக்க இருந்தேனே என கலங்கியவள்... எல்லாம் இவனால் தான் என அதற்கும் அவன் மீதே பழி சுமத்தி சட்டென தன்னை மாற்றி கொண்டு திமிரோடு அழுத்தமாக தலை நிமிர்ந்து நின்றவள்....



    அவனை கூர்ந்து பார்த்தவாறே “வாட் மிஸ்டர் வேந்தன்... என்னை என்ன உனக்கு கீழ வேலை செய்றவ னு நெனச்சியா நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைஞ்சி குடுக்க…. இல்ல நீ தான் உலகம் னு நெனச்சிட்டு இருந்தாளே அப்பாவி ரிகா அவள்ன்னு நெனச்சியா ம்ம்..." என புருவம் இரண்டை மட்டும் தூக்கி கேள்வியாக கேட்டவள்...



    "ஓஹ் உங்க அம்மா சொன்னாங்களா??... அவளை மறுபடியும் லவ் பண்ணி கைக்குள்ள போட்டுக்கோ... இப்போ சொத்தோட தனியா இருக்கா... எப்பிடியாச்சும் கவுத்துடு... சொத்துக்கு சொத்தும் ஆச்சு... கேசும் போட மாட்டா னு சொல்லி குடுத்து அனுப்பி வெச்சாங்களா..." என நிறுத்தி நிதானமாக... இகழ்ச்சியோடு ஒவ்வொரு வார்த்தையாக கூறி கொண்டே வந்தவளுக்கு… அந்நாளில் அவன் சுமத்தி சென்ற பழிக்கு பதிலடி கொடுத்த திருப்தி மனதில் உண்டானது...



    அவள் சொன்னதை கேட்ட மறு நொடி "ஏய்ய்ய்ய்ய்" என பெருங்குரலெடுத்து... கத்தி கொண்டே கழுத்தில் கை வைத்து அழுத்தி... அவளை தள்ளி சென்று சுவரருகில் நிறுத்தினான்



    " என்னடி சொன்ன?? ம்ம்ம்... என்னடி சொன்ன?? சொல்லுடி... என்னோட அம்மாவை என்னடி சொன்ன??... எங்க இப்போ மறுபடியும் சொல்லு பாப்போம்" என கூறி கழுத்தை நெறித்து கொண்டே கண்களில் அனல் தெறித்தவாறு சொன்னவன்... கண்கள் நிலை குத்தி நிற்க மூச்சுக்காக தவிக்கும் அவளின் உயிர் போராட்டத்தை கண்டு கைகளை தளர்த்தி அவளை விடுவித்தான்...



    முகம் சிவந்து தொண்டையைபிடித்து கொண்டு... இருமியவாறு இழுத்து இழுத்து மூச்சு விட்டு கொண்டு நின்றிருந்தவளை பார்த்தவனின் மனது உள்ளுக்குள் பிசைந்தாலும் அதை ஓரம்கட்டியவன் "ச்சை எப்பிடி டி.... எப்பிடி அவங்கள இப்பிடி பேச உனக்கு மனசு வந்துச்சி... அவங்கள பத்தி உனக்கு என்னடி தெரியும்... உனக்காக உன்னை மறக்க முடியாம தாண்டி அவங்கள இத்தனை வருஷமா பிரிஞ்சிருந்தேன்.. அது தெரியுமா உனக்கு...



    “இப்போ தான் நீ பணக்காரி னு எனக்கு தெரியுமா சொல்லு டி... நாலு வருசத்துக்கு முன்னாடியே உன்னை பத்தி தெரிஞ்ச எனக்கு... அப்போவே உன்ன மடக்கி இருக்க தெரியாதா”... என உறுத்து முறைத்து கொண்டே அவளருகில் வந்தவன்...



    “ஆமா என்ன சொன்ன???... ம்மம் என்ன சொன்ன”??... நெற்றியில் கைவைத்து யோசித்தவாறே “ கேஸ் ல இருந்து என்னோட அம்மா தப்பிக்க வைக்க உன்ன மயக்குறதா சொன்னல்ல... இப்போ நான் நெனச்ச உன்மேல அதே கேஸை திருப்ப முடியும் என்ன பாக்கறியா... என தெனாவட்டாக சொல்லியவனை அவள் உறுத்து முறைத்தாள்….



    “இப்போ சொல்றேன் கேட்டுக்கோடி... நீ எனக்கு எவ்ளோ முக்கியமோ... என்னோட அம்மாவும் எனக்கு அவ்ளோ முக்கியம்... இப்போ கூட என்னோட அம்மாவை பத்தி சொன்னது நீயா இருக்கவும் தான் பொறுமையா பேசிட்டு இருக்கேன் இல்ல”... என கண்கள் சிவக்க மூக்கு விடைக்க கோவத்தோடு சொல்லி கொண்டே மறுபடியும் கழுத்தை நெறிக்க வேக எட்டேடுத்து அவளருகில் வந்தான்....



    மனதில் எதையோ வென்ற திருப்தியுடன் பயமின்றி... அவனையே லேசாக கலங்கி சேவ்வரியோடிய கண்களால் முறைத்து கொண்டிருந்தவளை கண்டவன்... ஷிட் என கையை உதறி... திரும்பி கழுத்தின் பின்பு வைத்து தேய்த்து கொண்டே..... கண்களை இறுக மூடி தன்னை கட்டுப்படுத்தியவன்.... வெடுக்கென அவள் புறம் திரும்பி….



    “இதுக்கு தாண்டி.... இதுக்கு தாண்டி.... நான் உன்ன விட்டு தள்ளி இருக்கேன்.....நீ பண்ற எல்லாத்துக்கும் பொறுமையா இருந்தேன்.... கடைசில என்னையும் கோவப்பட வெச்சிடல்ல............ உங்கிட்ட வந்தாலே ஒன்னு நான் நிதானத்தை இழத்திடுவேன்.......... இல்ல உன்னை காயப்படுத்துவேன்னு தானே ஒதுங்கி ஒதுங்கி போறேன்.... இப்போவும் அதை தான் செய்யுறேன்... தேவை இல்லாம என்னை சீண்டாத”.... என சொல்லி விட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான்....


    தவம் தொடரும்
     
    Jansi, Rizniya, kalasrini and 62 others like this.
  5. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா

    எப்பிடி இருக்கீங்க எல்லாரும்

    எல்லாருக்கும் இந்த நாள் இனிய நாளா அமையட்டும்ங்க

    எனக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமான நாளு பட் எனக்கு விடிஞ்சதென்னவோ கொஞ்சம் அப்செட் ஆஹ் தான் அது என்ன னு அப்புறம் சொல்றேன் ஆனா அந்த அப்செட்டயும் நொடில போக்கி ஆனந்த அதிர்ச்சி குடுத்து என்னை கண்கலங்க வெச்சிட்டாங்க ஸ்ரீமா இதையும் அப்புறமா நான் தனி போஸ்ட் போட்டு சொல்லனும் அப்போ தான் அதுக்கு பொருத்தமா இருக்கும்

    இப்போ விஷயத்துக்கு வரேன் கதையோட முதல் அத்தியாயம் போட்டுட்டேன் மக்கா டீஸர்க்கு குடுத்த வரவேற்பை பார்த்து அவ்ளோ சந்தோசமா இருந்துச்சி எனக்கு மகிழ்ச்சியை குடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    அதே போல கதையை படிச்சிட்டு அதுக்கும் அதே வரவேற்பை குடுப்பீங்கங்குற எதிர்பார்ப்போட காத்திருப்பேன்

    படிச்சிட்டு எப்பிடி இருக்கு னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க நான் ரொம்ப ஹாப்பிஆவேன்

    கதையை படிக்க கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்


    இப்படிக்கு சேட்டையுடன்
    கண்ணம்மா rvrv

    செய்யாத மாதவம் நீயே
    அத்தியாயம் ஒன்று

    You must be registered for see links
     
  6. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா நான் வந்துட்டேன் வந்துட்டேன்

    எப்பிடி இருக்கீங்க எல்லாரும்

    நான் ரொம்ப நல்லா இருக்கேன் கதையோட முதல் எபிக்கு குடுத்த கம்மெண்ட்டை பாத்துட்டு மீ சோ ஹாப்பி மக்கா எல்லாருக்கும் ரொம்ப பெரிய நன்றி

    இதோ ரெண்டாவது எபியோட ஓடி வந்துட்டேன் படிச்சி பாத்துட்டு எப்பிடி இருக்கு னு ஒரு வார்த்தை சொல்லுங்க மீ ஹாப்பி ஆவேன் சாமிகளா

    இப்படிக்கு சேட்டையுடன்
    கண்ணம்மா rvrv


    கதையை படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

    You must be registered for see links
     
    Last edited: Oct 27, 2017
    selviesan, Jansi, K.Jayanthi and 52 others like this.
  7. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா

    எப்பிடி இருக்கீங்க எல்லாரும்

    நான் சூப்பரா இருக்கேன்

    இதோ மூணாவது எபியோட வந்துட்டேன் தொடர்ந்து ஆதரவு குடுத்து கமெண்ட் அண்ட் லைக் குடுக்குற நல்ல உள்ளங்களுக்கு நன்றி இன்னிக்கு வேந்தனும் , சாகரிக்காவும் சந்திக்கிறாங்க

    இது கொஞ்சம் பெரிய எபி எப்பிடியாச்சும் அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிருங்கோ சாமிகளா

    கதையை படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

    இப்படிக்கு சேட்டையுடன்


    கண்ணம்மா rvrv


    You must be registered for see links
     
    edam, selviesan, Jansi and 57 others like this.
  8. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா

    நான் வந்துட்டேன் நான் வந்துட்டேன்

    எப்பிடி இருக்கீங்க எல்லாரும்

    இதோ உங்களை பாக்க நான்காவது எபியோட வந்துட்டேன் படிச்சிட்டு எப்பிடி இருந்துச்சின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க

    இதற்கு முன்னாடி போட்ட எபிக்கு ஆதரவு குடுத்த எல்லாருக்கும் நன்றி நன்றி
    அண்ட் லவ் யூ ஆல்

    இப்படிக்கு சேட்டையுடன்

    கண்ணம்மா rvrv


    கதையை படிக்க கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

    You must be registered for see links
     
    selviesan, Jansi, K.Jayanthi and 55 others like this.
  9. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா

    எப்பிடி இருக்கீங்க எல்லாரும்

    நான் செமயா இருக்கேன் இதோ ஐந்தாவது எபியோட வந்துட்டேன் இந்த அத்யாயத்துல இருந்து சாகரிகாவோட கேம் ஸ்டார்ட் மகிழ் வேந்தன் அதை முறியடிக்கிறானா இல்ல முரண்டு புடிக்கிறானா பாக்கலாம்

    இதுக்கு முன்னாடி போட்ட எபிக்கு லைக் அண்ட் கமெண்ட் குடுத்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி மக்கா

    அதேமாறி இந்த எபிக்கும் ஆதரவு குடுத்து ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க மக்கா

    இப்படிக்கு சேட்டையுடன்

    கண்ணம்மா rvrv
    You must be registered for see links
     
    Last edited: Nov 7, 2017
    edam, selviesan, Jansi and 61 others like this.
  10. Kannamma rvrv

    Kannamma rvrv Well-Known Member

    Joined:
    Dec 11, 2016
    Messages:
    157
    வணக்கம் மக்கா

    எப்பிடி இருக்கீங்க எல்லாரும்

    நான் சூப்பரா இருக்கேன்

    இதுக்கு முன்னாடி போட்ட எபிக்கு லைக் அண்ட் கமெண்ட் குடுத்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி மக்கா

    இதோ ஆறாவது எபியோட வந்துட்டேன்
    இந்த எபிக்கும் ஆதரவு குடுத்து படிச்சு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க மக்கா

    இப்படிக்கு சேட்டையுடன்

    கண்ணம்மா rvrv

    You must be registered for see links
     
    edam, selviesan, Jansi and 51 others like this.
Thread Status:
Not open for further replies.

Share This Page