Srikala's-Thiththikkum Yethiri...!!! - Story Thread

Discussion in 'Srikala's Novel' started by Srikala, Jan 8, 2017.

Thread Status:
Not open for further replies.
 1. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  தித்திக்கும் எதிரி...!!! :fight2::fight::funny:

  "அப்பா..." நெளிந்து குழைந்து நின்றிருந்த மகளை கண்டதும் பொன்னுரங்கத்தின் இரு கண்களும் அவளை கூர்மையாய் அளவிட்டது...
  காரியமாக வேண்டும் என்றால் மட்டுமே அவள் இப்படி குழைந்து, நெளிந்து பணிவு காட்டுவாள்... இல்லை என்றால் அவள் பேசும் தோரணையே வேறு...

  "என்ன...?" முகத்தை வேண்டுமென்றே கடுமையாக வைத்து கொண்டு கேட்டார் அவர்...

  "ஃப்ராக்ரஸ் ரிப்போர்ட்..."

  'ஆக இதற்கு தான் இத்தனை பணிவா...?' என்று மனதில் நினைத்தபடி மகளின் கையிலிருந்த மதிப்பெண் அறிக்கையை வாங்கினார்... வெளியில் என்னவோ நிதானமாக காட்டி கொண்டாலும் அவரையும் அறியாமல் மனதில் ஒருவித பதட்டம் வந்து குடி கொண்டது...

  ஆனாலும் முயன்று நிதானத்தை வரவழைத்து கொண்டு கையிலிருந்த மதிப்பெண் அறிக்கையை பார்த்தவர் அடுத்த நொடி ருத்ரமூர்த்தியாய் மாறி போனார்...

  "எருமை மாடே... நீ எருமை மாடு மேய்க்கத்தான் லாயக்கு... உன்னை போய் கான்வென்ட்டில் படிக்க வைக்கிறேனே, என்னை..." என்று பல்லை கடித்தவரை பயத்துடன் பார்த்தவள் மனதிலோ கடுகளவும் பயிமில்லை...

  'செருப்பால அடிச்சிக்கணும்... அதை தானே சொல்ல வர்றீங்க...? நேத்து தான் நான் புதுசா ஒரு ஹைஹீல்ஸ் செருப்பு வாங்கி வந்தேன்... கொண்டு வந்து தரட்டுமா...?' மெல்லமாய் முணுமுணுத்த அவளது வார்த்தைகள் நல்லவேளையாக அவரது காதில் விழவில்லை...

  "என்னடி... என்னை அடிக்க செருப்பை ரெடி பண்ணுறியா...?" மகளின் மனம் அறிந்தவராய் அவராய் ஊகித்து கொண்டு அப்படி கேட்டார்...

  "ஐயோ... அப்படி எல்லாம் இல்லைப்பா..." என்றவளின் வார்த்தையிலிருந்த பயம் மருந்துக்கும் அவளது கண்களில் இல்லை... மாறாக அது அவரை பார்த்து கேலியாய் சிரித்தது...

  "ஏன்டி... நாலு பாடத்தில் ஃபெயிலானதும் இல்லாம என்னை பார்த்து கேலி வேறு பண்றியா...?" என்றபடி அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து வேகமாய் அவர் எழுந்தார்...

  "நீங்க தானேப்பா சொன்னீங்க... அவனை விட எல்லாத்திலும் அதிகமா இருக்கணும்ன்னு... அவன் மூணு பாடத்தில் ஃபெயில்... ஆனா நான் நாலு பாடத்தில் ஃபெயில்... மூணு பெருசா, நாலு பெருசா...? அவனை விட நான் தான் அதிகமான பாடத்தில் ஃபெயிலாகி இருக்கேன்... அப்போ நான் தானேப்பா ஃபர்ஸ்ட்..."

  தேர்வில் தோல்வியுற்றதுக்கு அவரது மகள் புது அர்த்தம் சொன்னாள்...

  "தறுதலை... பேசுறதை பாரு... அப்படியே உங்கம்மாவை போல ஞானசூன்யம்... ஏன்டி... அவன் மத்த மூணு பாடத்தில் பாசாகி இருக்கானே... அவனை விட அதிகமான பாடத்தில் பாசாகணும்ங்கிற நினைப்பு இருக்கா உனக்கு...? உனக்கு ஏத்த மாதிரி உன் இஷ்டத்துக்கு பேசுவியா...? இன்னைக்கு உனக்கு இருக்குடி கச்சேரி..." என்றவர் மகளை அடிக்க கையை ஓங்கி கொண்டு வந்தார்...

  அவர் தன் அருகில் வரும் முன் அவள் நாலு கால் பாய்ச்சலில் அவரிடம் இருந்து தப்பித்து வெளியில் ஓடினாள்...

  அடுத்து நாயகனின் அறிமுகத்தோடு விரைவில் வருகிறேன் மக்களே...

  நாயகன், நாயகி பெயர் பற்றிய அறிவிப்பு தைத்திருநாளில்... காத்திருங்கள் மக்களே...

  அன்புடன்,
  ஶ்ரீகலா :)
   
 2. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  தித்திக்கும் எதிரி...!!!

  மகனுக்கு காபியை எடுத்து கொண்டு வந்த வைதேகி அவனது அறையில் இருந்த உருவத்தை கண்டு பயத்தில் 'அம்மா' என்று அலறியவர் கையில் இருந்த காபித் தம்பளரை 'ணங்' என்ற சத்தத்துடன் கீழே போட்டார்...

  "அம்மா... நான் தான்ம்மா..."

  "கூறுகெட்ட மவனே... இது என்னடா கூத்து...?"

  மகன் முகத்தில் அப்பியிருந்த பல வண்ணத்தில் இருந்த அந்த கலவையை சுட்டிக்காட்டி கேட்டார்...

  "உன்னை மாதிரி நல்ல நிறமா வர்றதுக்கு போட்டிருக்கேன்ம்மா..."

  "க்கும்... அப்படியே நிறமா வந்துட்டாலும்..." என்று நொடித்து கொண்டவர், "அப்படியே அப்பனை போல் கருவாயனா வந்து பிறந்து தொலைச்சிருக்கிற உனக்கு என்ன பூசினாலும் உன் நிறம் மாறாதுடா மகனே..."

  அன்னையின் 'கருவாயா' என்ற சொல்லில் மகனுக்கு மிகுந்த கோபம் வந்தது...

  "அம்மா..." என்று கத்தினான்...

  "என்ன என் மகனையும், பேரனையும் ஏதோ சொன்னாப்பல இருந்தது...?" என்றபடி அங்கு வந்து சேர்ந்தார் வேதநாயகி... அவனது தந்தையை பெற்ற அன்னை...

  மாமியாரை கண்டதும் அப்படியே அடங்கி போய் பவ்யம் காட்டினார் வைதேகி...

  "அது ஒண்ணுமில்லை அத்தை..."

  "ஆச்சி... அம்மா பொய் சொல்றாங்க... நான் அப்பா மாதிரி கறுப்பா இருக்கேன்னு சொல்றாங்க..." என்று மகன் அன்னையை பாட்டியிடம் போட்டு கொடுத்தான்...

  'தடிமாடு... இதிலேயும் அப்பனை கொண்டு பிறந்திருக்கு பாரு...' மனதுக்குள் மகனுக்கு அர்ச்சனை செய்தார் வைதேகி...

  "அது மட்டுமா சொன்னா ராசா... உன்னை கூறுகெட்ட மவன்னு சொன்னாளே... அப்படின்னா என் மகன் உன் ஆத்தாளுக்கு கூறுகெட்டவனா...?" என்று சொல்லியபடி மருமகளை ஓரக்கண்ணால் விசமமாய் பார்த்தார் வேதநாயகி...

  'அடியாத்தி... இதில் இம்புட்டு வில்லங்கம் இருக்கா...? இந்த மனுசனுக்கு மட்டும் நான் சொன்னது தெரிஞ்சது நான் தொலைஞ்சேன்..."

  கணவரை நினைத்து அவருக்கு இப்போதே அடிவயிறு கலங்கியது...

  "ஐயோ அத்தை... நான் உங்க மகனை சொல்லலை... என் மகனை சொன்னேன்..." என்று வைதேகி பதறி போய் சமாளித்தார்...

  "என் ராசாவுக்கு என்ன...? அவனை போய் நீ எப்படி கூறுகெட்டவன்னு சொல்லலாம்...? அப்படி சொல்ற உனக்கு தான் கூறு இல்லை..." என்று மருமகளை அவர் திட்ட,

  "அப்படி சொல்லு ஆச்சி..." பேரன் பாட்டிக்கு ஹை-பை கொடுத்தான்...

  வேதநாயகி பேரனிடத்தில், "ராசா... இந்த ஜூஸை குடி..."

  "ஆச்சி... ஜூஸ் கலரே ஒரு மாதிரியா இருக்கே..." முகத்தை சுழித்தான் பேரன்...

  தன் முகத்தில் பூசிய கலவை போன்று அந்த பழச்சாறின் கலவையும் இருந்ததில் பேரன் சற்று யோசித்தான்...

  "இது குடிச்சா நீ நல்ல கலரா வருவ... நம்ம கடைவீதியில் ப்யூட்டி பார்லர் வச்சிருக்காளே ராதா பொண்ணு, அவ கிட்ட கேட்டு உனக்காக நானே தயாரிச்சது ராசா... இதுல கேரட், வெள்ளரிக்காய், தேனு எல்லாம் கலந்து இருக்கேன்..."

  "இது குடிச்சா நான் நல்லா கலரா வருவேனா..." என்று கேட்ட பேரனின் கண்களில் அப்படியொரு ஆசை மின்னியது...

  "நிசமா ராசா..."

  "அந்த குள்ளச்சிய விடவா...?"

  "அந்த கொந்தவரங்காய விட நீ நல்ல நிறமா வருவ பாரு..." என்று வேதநாயகி ஆசை காட்ட... உடனே அடுத்த நொடி பழச்சாறை வாங்கியவன் அதை முழுவதையும் குடித்து முடித்திருந்தான்...

  "ஏண்டா... இது உனக்கே அதிகமா தோணலை... அவளோட எலுமிச்சம்பழ கலருக்கும், உன் கருங்கல் கலருக்கும் ஏணி வச்சாலும் எட்டுமாடா...?"

  "அவளும் அப்படி சொல்லித்தான் என்னைய கிண்டல் பண்றா ஆச்சி... என்னை பார்க்கும் போது எல்லாம் கருவாயா, கருவாயான்னு கேலியா கூப்பிடறா..." பேரன் பாட்டியிடம் சிணுங்கினான்...

  அவன் சிணுங்குவதை கேட்டபடி அங்கு வந்து சேர்ந்தார் வைத்தியநாதன்...

  "உனக்கு வெக்கமா இல்லையாடா..."

  தந்தையை கண்டதும் அவன் பாட்டியின் பின் பம்மினான்...

  "எப்பப்பாரு அவளோட போட்டி போடுறது...? அவளும் நீயும் ஒண்ணாடா...? ஆம்பிளை புள்ளையும், பொட்டப் புள்ளையும் ஒண்ணா...? அவ என்ன செய்றாளோ அதை எல்லாம் ஒண்ணு விடாம செய்றது... உனக்கே அது வெக்கமா இல்லை... அவ டான்ஸ் க்ளாஸ், பாட்டு க்ளாஸ் போனான்னு நீயும் போன பாரு... அப்பவே உன்னோட கிறுக்குப்புத்தி எனக்கு தெரிஞ்சு போச்சு... நீ எல்லாம் எங்கே உருப்பட போற..."

  "அது அறியாத வயசு..." என்றான் மகன் மெல்லமாய்... தந்தையை கண்டால் மட்டும் அவனது நாக்கு இப்படி சதிராட்டம் ஆடுகிறதே... அவனும் என்ன செய்வான் பாவம்...

  பத்து வயதில் அவள் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு கற்று கொள்ள சென்றாள் என்று தானும் அடம்பிடித்து சென்றதை இப்போது மிகுந்த அவமானமாக கருதினான்... என்ன செய்ய எல்லாம் காலம் கடந்து வந்த ஞானோதயம்...

  "ஓஹோ... இப்போ எல்லாம் அறிஞ்ச வயசு தானே..." என்றவரின் பார்வை அவனது முகத்தில் அழுத்தமாய் படிந்தது...

  "முதல்ல இந்த கோமாளி வேசத்தை சோப் போட்டு கழுவு... எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்க பாரு... தடிமாடு..." என்றவர் மனைவியிடம்,

  "உனக்கு வேற தனியா சொல்லணுமா...? வந்து சாப்பாடு எடுத்து வை..." என்று மனைவியை அதிகாரம் பண்ணியபடி உணவு மேசையை நோக்கி சென்றார் அவர்...

  தந்தை மீது எழுந்த அவனது கோபம் எல்லாம் இப்போது அவள் மீது திரும்பியது...

  'குள்ளச்சி... உன்னைய...?' என்று ஆத்திரமாய் பல்லைக் கடித்தான் அவன்...
   
 3. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  ஹாய் பிரெண்ட்ஸ்,

  எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் :) இனிக்கும் பொங்கலை சாப்பிட்டுவிட்டு இனிமையுடன் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் உங்களுக்காக நாயகன், நாயகி பெயர் அறிமுகத்தோடு வந்திருக்கிறேன்... இது ஒரு ஜாலியான, நகைச்சுவை கலந்த மெல்லியக் காதல் கதை... எனக்கு இப்படி எழுதுவது புதிது... உங்களை நம்பித்தான் நகைச்சுவை கதைக்கு பிள்ளையார்சுழி போட்டு இருக்கிறேன்... எப்போதும் போல் உங்களது ஆதரவை எனக்கு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்...

  நாயகன் : ஆர்யா @ அழகம் சுந்தரப்பெருமாள்
  நாயகி : நயன்தாரா @ வலமங்கை நாச்சியார்

  கதையின் நாயகன், நாயகி ஆர்யா மற்றும் நயன்தாராவின் அலப்பறைகள் உங்களை அலற வைப்பதற்கு நான் க்யாரண்ட்டி... விரைவில் முதல் அத்தியாயத்துடன் உங்களை வந்து சந்திக்கிறேன்... (எப்போன்னு நான் சொல்ல மாட்டேன் மக்களே... ஏன்னா அப்டேட் விசயத்தில் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்... ஹா... ஹா...)

  அன்புடன்,
  ஶ்ரீகலா :)
   
 4. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  கருத்துக்கள் பதிந்த அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... வரும் திங்கள் அன்று முதல் அத்தியாத்துடன் வருகிறேன்...
   
 5. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
 6. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  அடுத்த அத்தியாயம் "கனவில் நனவாய் நீ" கதைக்கான முதல் அத்தியாயம் கொடுத்தற்கு பிறகு... அதுவரை காத்திருங்கள்...
   
 7. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
 8. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
 9. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
 10. Srikala

  Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  1,395
  மக்களே... நாளைக்கு நான் கொஞ்சம் பிசி... அதனால் தித்திக்கும் எதிரி அப்டேட் திங்கள் கிழமை போடுகிறேன்...
   
  Thivinayah, Jeni, SELVA RANI and 15 others like this.
Thread Status:
Not open for further replies.

Share This Page