Kichadi recipes

Discussion in 'Recipes and Cooking Tips' started by PriyaSai, Jan 6, 2017.

Sponsored
  1. PriyaSai

    PriyaSai New Member

    Joined:
    Jan 2, 2017
    Messages:
    14
    Friends ,

    Vegitables potu kichadi epadi pannumnu solluga please
     
    Srikala likes this.
  2. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    2,558
    இதுக்கு ரெசிப்பி எழுதிக்கிட்டு வந்து நாளை சொல்கிறேன்... ரவை or சேமியா எந்த கிச்சடி வேண்டும்...?
     
    PriyaSai likes this.
  3. PriyaSai

    PriyaSai New Member

    Joined:
    Jan 2, 2017
    Messages:
    14
    ethunalum okay ka . vegetables potu kichadi pannu mel edathu utharavi .kaai podama than ennaku seiya theriyum . kaai potu epadi pannrathunu theriyala :(
     
    Srikala likes this.
  4. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    2,558
    ஹா... ஹா... மேலிடத்து உத்தரவு என்றால் பணிந்து தான் ஆகணும்... யாமிருக்கப் பயமேன் ;)
     
    Lakshmi, mithravaruna and PriyaSai like this.
  5. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    2,558
    சேமியா or ரவா கிச்சடி

    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப் அல்லது சேமியா - 1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 1
    கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை, மல்லி இலை தேவையான அளவு
    உப்பு தேவையான அளவு

    தாளிப்பதற்கு :
    கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தேவையான அளவு (இத்துடன் கொஞ்சம் மிளகு, சீரகம் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும்)

    எண்ணெய், நெய் தேவையான அளவு

    செய்முறை :

    ரவை or சேமியாவை சிறிது நெய் விட்டு லேசாக சிவந்த நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்... (இப்படி வறுப்பதால் நீர் ஊற்றும் போது ரவை கட்டி விழாது, சேமியா குழைந்து போகாது)

    வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் கலந்து ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் போடவும்... அது காய்ந்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்... வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் கலந்து பச்சை வாடை போகும் வரை வதக்கிவிட்டு அதன் பின் அதில் காய்கறி, பச்சை மிளகாய், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்... காய்கறி சிறிது வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்... பின் தேவையான நீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்...

    நன்கு கொதி வந்ததும் ரவை or சேமியா போட்டு கிண்டவும்... கிச்சடி நீர் வற்றி வெந்ததும் மல்லி இலை தூவி அதில் சிறிதளவு நெய்விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்...

    இதில் சாம்பார் பொடி போட்டு செய்தால் அது தனிச்சுவையாக இருக்கும்... அது போல் தாளிக்கும் போது பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து மசாலாப் பொருட்களுடன் சிறிது கரம் மசாலாத்தூள் மற்றும் பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து கிச்சடி செய்தால் பிரியாணி நறுமணத்துடன் இன்னமும் சுவையாக இருக்கும்... இந்த செய்முறை நம் வீட்டு குட்டீஸ்க்கு மிகவும் பிடிக்கும்...
     
  6. PriyaSai

    PriyaSai New Member

    Joined:
    Jan 2, 2017
    Messages:
    14
    thanks akka . try pannitu result sollurean
     
    Srikala likes this.
  7. Lakshmi

    Lakshmi Well-Known Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    649
    Nice recipe,let's try it
    Morning breakfaste idhudan
    thanks sri mam
     
    Srikala likes this.
  8. Srikala

    Srikala My 20th Novel - "மெழுகுப்பாவை இவளோ...!!!"

    Joined:
    Dec 10, 2016
    Messages:
    2,558
    கிச்சடி ப்ரேக் பாஸ்ட் எப்படி இருந்தது...?
     
    Lakshmi likes this.
  9. Lakshmi

    Lakshmi Well-Known Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    649
    Breafast supara irunthathu my children loved it thanks mam
     
    Srikala likes this.
  10. mithravaruna

    mithravaruna Well-Known Member

    Joined:
    Dec 15, 2016
    Messages:
    1,312
    Location:
    Mysore
    படிக்கும் போதே அதன் சுவை நாவில் தெரிகின்றது ஸ்ரீ. நன்றி.
     

Share This Page