மன நலம் காப்போம்.....

Discussion in 'Women Health' started by mithravaruna, Jan 4, 2017.

 1. Lakshmi

  Lakshmi Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  62
  Neengal solvadhu mikavum sari sagi books ennudaya best friend mattumalla adharkum mele vasithal ennaku amaidhiyum kodukkum
   
  mithravaruna likes this.
 2. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.......

  தோழிகளே, நாம் நன்றாக பேசக் கூடியவராக, நன்றாகப் பழகக் கூடியவராக இருக்கலாம்.
  நிறைய பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம். ஆனால் நம் உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் நம்மால் எதையும் சரியாகவும், தெளிவாகவும் செய்யவும் சிந்திக்கவும் முடியாது. அது நம் மனதை பாதிக்கும். மன அமைதி இன்மையையும், மன அழுத்தத்தையும் கொடுக்கும்.


  நம் ஆரோக்கியத்தை காக்க நம் வீட்டிலேயே பல பொருட்கள் உள்ளது. அதை சரியான விகிதத்தில், சரியான அளவில் நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நம் உடல் மட்டுமல்ல மனமும் தெளிவடையும்.

  உணவை விடச் சிறந்த மருந்து வேறொன்றில்லை என்ற பழமொழி பொய்யில்லை.
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
  நாக்கு ருசியைப் பார்க்காதே – உணவில்

  நல்ல சத்தை நீக்காதே
  ஊட்டம் பெற்று வளர்ந்திடவே – நாளும்

  உணவு தேர்ந்து பழகிடுவோம்
  பாகற்காயை வெறுக்காதே – பூண்டு

  கறிவேப்பிலையை பொருக்காதே
  தாகம் தீர நீரருந்து – கொஞ்சம்

  தவிப்பாய் இருந்தால் மோரருந்து
  காப்பி தேநீர் குடிக்காதே – வீணாய்க்

  கட்டுடலைக் கெடுக்காதே
  காலை மாலை தேனருந்து – நல்ல

  காராம்பசுவின் பாலருந்து
  ======================================

  –கவிஞர் மாதப்பன்
  என்ற சிறுவர் பாடலும்,
  ‘தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனில்’
  என்று திருவள்ளுவரும்,

  ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் ரூபமாகத் தோன்றுகிறார் என காந்தியடிகள் போன்றோர் கூறியது உணவில்லையேல் வாழ்க்கையே அழியும் என்பதைத்தான் காட்டியுள்ளது.

  • காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
  • இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு.
  • மாதா ஊட்டாத சோற்றை மாங்கா ஊட்டும்
  • ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
  • பழகப் பழக பாலும் புளிக்கும்.
  • ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.
  • கந்தையானாலும் கசக்கி கட்டு கூழானாலும் குளித்துக்குடி.
  • சுத்தம் சோறு போடும்.
  ஆகிய பழமொழிகளும் உண்ணும் உணவே முழு முதல் மருந்து என்பதையே சொல்கின்றது.

  ஆகவே, தோழிகளே நாம் சமைக்கும் உணவும், உண்ணும் உணவும் நம் உடலை மட்டுமல்ல, நம் மனதையும் காக்கட்டும்.

  நன்றி.
   
  Lakshmi likes this.
 3. Josphin Vanmathy

  Josphin Vanmathy New Member

  Joined:
  Dec 12, 2016
  Messages:
  14
  super mithravaruna... nice tips especially muthumai kathal patriya oru quote fantastic.. awesome & useful tips.
   
  mithravaruna likes this.
 4. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  T
  thank you Joshpin
   
 5. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  மன வலிமை......
  [​IMG]
  [​IMG]
  [​IMG]
   
 6. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
 7. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
  மனவலிமை இருந்தால் உங்கள் உடலை மட்டுமல்ல வாழ்வையே வென்று விடலாம்.

  [​IMG]
   
 8. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore
 9. mithravaruna

  mithravaruna Active Member

  Joined:
  Dec 15, 2016
  Messages:
  110
  Location:
  Mysore

Share This Page